மொபைலிலோ அல்லது கணனியிலோ எமது தகவல்கள் கசியாமல் இணையத்தை பயன்படுத்துவதற்கு அடிக்கடி VPN செயலிகளைப் பயன்படுத்துகிறோம். அதே போல சில மத்தியகிழக்கு நாடுகளில் தொழில் புரிவோர் தமது உறவுகளுடன் கதைப்பதற்காக WhatsApp போன்ற செயலிகளைப் பயன்படுத்தினாலும், அலைப்புகளை மேற்கொள்ள இடைஞ்சல்கள் இருப்பதால் பல்வேறுபட்ட VPN செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்தும் பெரும்பாலான செயலிகள் இலவசமாக கிடைக்கக்கூடியவை. என்றாலும் இத்தகைய இலவச செயலிகளைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை சதிக்கவேண்டியிருக்கும். இதில் முக்கியமானது அடைஞ்சல் தரும் விளம்பரங்கள். மற்றது மிகக் குறைந்த வேகம். அதேபோல VPN சேவையை Connect செயதற்கு நீண்ட கத்திருப்புகளுன் சிலவேளை தேவைப்படும்.
இவை அனைத்திற்கும் மிகச் சிறந்த பதில் செயலிதான் நாம் சொல்லப்போகும் இந்த செயலி. 1.1.1.1. VPN என அழைக்கப்படும் இந்த செயலி இலவசமாக கிடைப்பதோடு, எவ்வித விளம்பரங்களும் இன்றி பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. மிக இலகுவாக யாராலும் நிறுவிக்கொள்ள முடிந்த இச் செயலியை Android, Apple மொபைல் போன்களிலும், Windows, Mac, Linux இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலும் இலவசமாகப் பயன்படுத்த முடிகிறது.
பயன்படுத்திவிட்டு எமக்கும் சொல்லுங்கள்.

A blog like yours should be earning much money from adsense..-.,?