கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல நிறுவனமான Roar Global, இலங்கையின் முதலாவது AI நுழைவாயில் தளமான Roar AI ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. உள்ளூர் டெவலப்பர்கள் (Developers), ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் (Startups) மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்னணி சர்வதேச AI மாடல்களை ஒரே இடத்தில் மிக இலகுவாக அணுகுவதற்கு வழிவகை செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.
வழமையாக AI அடிப்படையிலான மென்பொருட்கள் அல்லது அப்ளிகேஷன்களை (Applications) உருவாக்கும் போது ஒவ்வொரு AI மாடலுக்கும் தனித்தனியாக API கீகளைப் பெறுவது, சர்வதேசக் கட்டணங்களை டொலர்களில் (USD) செலுத்துவது, மற்றும் சர்வர் ஹோஸ்டிங் உட்கட்டமைப்புகளை அமைப்பது போன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் எமது நாட்டு டெவலப்பர்களுக்கு ஏற்படுவதுண்டு. இந்த சவால்களுக்குத் தீர்வாகவே Roar AI ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
Roar AI தளத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- 200+ முன்னணி AI மாடல்கள்: Anthropic, Gemini, Perplexity, Llama, DeepSeek மற்றும் Kimi உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட Frontier மற்றும் Open-source AI மாடல்களை ஒரே API இணைப்பு மூலம் பயன்படுத்த முடியும்.
- அதிவேக வினைத்திறன் (Low Latency): கொழும்பிலேயே இந்த சேவையகங்கள் (Servers) ஹோஸ்ட் செய்யப்படுவதால், உள்நாட்டு பயனர்களுக்கு மிகக் குறைந்த பிங் (Ping <7ms) வேகம் கிடைக்கிறது.
- இலங்கை ரூபாயில் கட்டணம் (LKR Billing): சர்வதேச கிரெடிட் கார்ட் வரம்புகள் அல்லது டொலர் கொடுப்பனவுச் சிக்கல்கள் இன்றி, முழுமையான பயன்பாட்டுச் செலவையும் இலங்கை ரூபாவிலேயே நிர்வகிக்கக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
- முழுமையான App Infrastructure: வெறும் சாட்போட் (Chatbot) தளமாக மட்டுமில்லாமல், அப்ளிகேஷன்களை உடனடியாக இயக்கும் வகையில் Built-in Databases, Transactional Email, மற்றும் Automated Backups போன்ற நவீன வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
- Budget மற்றும் Usage Control: நிறுவனங்கள் அல்லது டெவலப்மென்ட் டீம்கள் தங்களது செலவுகளைக் கட்டுப்படுத்தவும், டோக்கன் பயன்பாட்டை கண்காணிக்கவும் பிரத்யேக Dashboard வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை வெறுமனே நுகரும் சந்தையாக மட்டும் இலங்கை இருக்காமல், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத் தீர்வுகளை எமது நாட்டிலிருந்தே உருவாக்கி சர்வதேச சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு இவ்வாறான உட்கட்டமைப்புத் தளங்கள் மிகவும் இன்றியமையாதவை. ஆரம்பகட்டமாக தெரிவுசெய்யப்பட்ட டெவலப்பர்களுக்கு Early Access அடிப்படையில் இந்த தளம் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
