இந்தியாவை ஆட்டியெடுக்கும் Blue Whale ; தொடரும் தற்கொளைகள்

Share or Print this:

கேரளாவில் உள்ள இரண்டு பெற்றோர்கள் புளூ வேல் (Blue Whale) என்னும் இணையதள விளையாட்டால் அவர்களுடைய மகன்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்த தகவலால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மனோஜ் சி மனு என்னும் 16 வயது சிறுவனின் குடும்பத்தை காவல்துறையினர் சந்தித்தபோது சிறுவனின் பெற்றோர் இணையதளத்தில் உள்ள புளூ வேல் விளையாட்டால் தான் அவர்களுடைய மகன் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து மனோஜின் தாய் கூறும்போது, மனோஜ் 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து புளூவேல் விளையாட்டை விளையாடி வருவதாகவும், அதனால் அவனுடைய கைகளில் காம்பஸ் (compass) கருவியைக் கொண்டு ‘ABI’ என்று எழுதியதாகவும் கூறினார். மேலும் ஒருமுறை புளூவேல் விளையாட்டில் கொடுக்கப்பட்ட சவாலை நிறைவேற்றுவதற்காக மனோஜ் ஆற்றில் குதித்ததாக கூறினார்.
பின்னர் மனோஜ் ஒருநாள் புளூவேல் விளையாட்டைப்பற்றி அவருடைய தாயாரிடம் கூறியுள்ளார், அப்பொழுது புளூவேல் விளையாட்டில் 50வது நாள் யாராவது ஒருவரை கொலை செய்ய வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்னும் சவால் கொடுக்கப்படுவதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மனோஜின் தாய் அந்த விபரீத இணையதள விளையாட்டை விளையாட வேண்டாம் எனக் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் மனோஜ் அவருடைய தாயிடம் மரணத்தைக் குறித்து பேசியுள்ளார். ஒருவேளை நான் இறந்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று மனோஜ் அவருடைய தாயிடம் கேட்டுள்ளார். மனோஜ் தற்கொலை செய்துகொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு திகில் திரைப்படங்களை அதிகமாக பார்த்ததாகவும் மனோஜின் தாய் கூறினார்.


ஆனால் மனோஜின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை அதிகாரி, தற்கொலை செய்துகொண்ட மனோஜ் புளூ வேல் விளையாட்டை விளையாடியதற்கான எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என கூறினார்.
இதே போல் சாவந்த் என்னும் 22 வயது இளைஞரும் புளூவேல் விளையாட்டால் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர். தற்கொலை செய்துகொட சாவந்த் அவனுடைய கையிலும், மார்பிலும் பிளேடால் கிழித்துக்கொண்டதாகவும், சில எழுத்துக்களை பிளேடைக் கொண்டு கையில் எழுதியதாகவும் செய்தியாளர்களிடம் கூறினர்.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஆபத்தான புளூவேல் இணையதள விளையாட்டை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மத்திய அரசும் இந்த விளையாட்டை தடை செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *