Meta AI வழங்கும் புதிய Mac App : இனி உங்கள் App களுடன் நேரடியாகக் கதைக்கலாம்!

Share or Print this:

இன்றைய காலகட்டத்தில் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் எமது அன்றாட வேலைகளை மிகவும் இலகுவாக்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் Meta நிறுவனம் தங்களது Meta AI இற்கென பிரத்தியேகமான புதிய Mac App ஒன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது சாதாரண ஒரு AI Chatbot ஆக மட்டுமன்றி, பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டு Mac பாவனையாளர்களின் (Users) வேலைகளை இலகுவாக்க வந்துள்ளது.

இந்த புதிய App இல் உள்ள மிக முக்கியமான வசதி என்னவென்றால், இதன் System-wide Dictation வசதியாகும். அதாவது, உங்கள் Mac கணனியில் நீங்கள் எந்த ஒரு மென்பொருளில் (Software) வேலை செய்துகொண்டிருந்தாலும், உங்கள் குரல் மூலமாகவே அந்த App களுடன் நேரடியாகக் கதைக்க முடியும். விசைப்பலகையில் (Keyboard) Type செய்வதற்குப் பதிலாக, நீங்கள் சொல்வதை அப்படியே உள்வாங்கி அது செயற்படும். இது அண்மையில் Google அறிமுகப்படுத்திய Gemini Mac App இன் செயற்பாட்டை ஒத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமன்றி, இதில் உள்ள இன்னொரு சுவாரஸ்யமான வசதிதான் Screen Context. இதன் மூலம் நீங்கள் தற்போது வேலை செய்துகொண்டிருக்கும் Screen ஐ அப்படியே Meta AI இற்கு காண்பித்து, அது தொடர்பான கேள்விகளை கேட்க முடியும். உதாரணத்திற்கு, ஒரு டிசைன் (Design) அல்லது ஒரு Spreadsheet ஐ Screen இல் வைத்துக்கொண்டு, அதிலுள்ள தரவுகள் பற்றிய ஆலோசனைகளை நீங்கள் AI இடம் பெற்றுக்கொள்ளலாம். Option-Space ஐ அழுத்துவதன் மூலம் இந்த App ஐ மிக விரைவாக Open செய்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விசேடமாக வியாபாரங்களுக்கும் (Businesses), Content Creators களுக்கும் இந்த App மிகவும் பயனுள்ளதாக அமையும். உங்களது Facebook, Instagram கணக்குகள், Meta Ad Accounts மற்றும் Google Workspace (Gmail, Docs, Sheets) போன்றவற்றை இதனுடன் நேரடியாக Connect செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது Social Media பதிவுகள் எந்தளவுக்கு Reach ஆகியுள்ளது, Ad Campaigns களின் நிலை என்ன என்பது போன்ற Analytics தரவுகளை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அத்துடன் உங்கள் வியாபாரப் போட்டியாளர்கள் (Competitors) பற்றிய தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இதுவரை காலமும் இணையத்தளங்களினூடாக (Web) நாம் பயன்படுத்திய AI சேவைகளை, நேரடியாக எமது கணனியிலேயே ஒரு Native App ஆக, வெறும் 16MB அளவிலான ஒரு சிறிய மென்பொருளாகப் பயன்படுத்த முடிவது உண்மையில் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். நீங்களும் ஒரு Mac பாவனையாளராக இருந்தால் (Apple Silicon Processor களில் இயங்கும் MacOS 15 அல்லது அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில்) நிச்சயம் இந்த புதிய Meta AI App ஐ Install செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *