நம்மில் பல பேருக்கு AI Tools-ஐப் பயன்படுத்துவது இப்போது அன்றாட பழக்கமாகிவிட்டது. இலங்கையிலும் கூட மாணவர்கள் முதல் IT துறையில் வேலை செய்பவர்கள் வரை எல்லோரும் ஏதோ ஒரு வகையில் AI-ஐ நாடிச் செல்கிறோம். இந்த நிலையில், AI Assistant சந்தையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Google நிறுவனத்தின் தயாரிப்புகளான Search, Gmail, Drive, Android, YouTube, மற்றும் Chrome போன்ற பல சேவைகளை 1 பில்லியனுக்கும் (100 கோடி) அதிகமான பாவனையாளர்கள் (Users) பயன்படுத்துகிறார்கள் என்பது எமக்குத் தெரிந்ததே. இப்போது இந்த 1 Billion Users லிஸ்டில் Google-இன் AI Assistant ஆன ‘Gemini’ யும் இணையப் போகிறது!
வேகமாக வளரும் Gemini பாவனையாளர்கள்
சமீபத்தில் வெளிவந்த Google நிறுவனத்தின் Q2 2026 அறிக்கைகளின் படி, Gemini-யின் Monthly Active Users (மாதாந்தரப் பாவனையாளர்கள்) 950 மில்லியனைத் தாண்டிவிட்டது. கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இது மூன்று மடங்கு அதிக வளர்ச்சியாகும். கடந்த பெப்ரவரி மாதத்தில் 750 மில்லியனாக இருந்த இதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை, வெறும் சில மாதங்களுக்குள் இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது உண்மையில் ஆச்சரியமான விடயம் தான்.
ChatGPT-க்கு பெரிய ஆப்பு?
கடந்த ஜூன் மாதம் தான் OpenAI நிறுவனத்தின் ChatGPT, 1 பில்லியன் Users-ஐக் கடந்து சாதனை படைத்தது. இப்போது Gemini-யும் அந்த மைல்கல்லை நெருங்கிவிட்டதால், AI Assistant களுக்கிடையிலான போட்டி சூடுபிடித்துள்ளது.
Sensor Tower என்ற Analytics நிறுவனம் வெளியிட்ட “State of AI” அறிக்கையின் படி, இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (H1), ChatGPT-யின் Market Share முதல் தடவையாக 50%-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதேவேளை Gemini-யின் மார்க்கெட் ஷேர் 27.7% ஆக அதிகரித்துள்ளது.
எதனால் இந்த திடீர் வளர்ச்சி?
இதற்கு முக்கிய காரணம், Google தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் புதிய AI Feature கள் தான். விசேடமாக ‘Daily Brief’ மற்றும் ‘Gemini Spark’ போன்ற Personalized Agent வசதிகளை Users அதிகம் விரும்புவதாக Alphabet CEO சுந்தர் பிச்சை (Sundar Pichai) தெரிவித்துள்ளார். ஒரு சாதாரண Chatbot ஆக இல்லாமல், எமக்குத் தேவையான விடயங்களை நாமே கேட்காமலேயே முன்கூட்டியே செய்து தரும் (Proactive) வசதிகள் தான் இதன் வெற்றிக்குக் காரணம்.
Android-இல் மட்டுமல்ல iOS இலும் அதிரடி
Android Device களில் Google-இன் Ecosystem இருப்பதால் Gemini-யின் பாவனை அதிகமாக இருக்கும் என்பது நாம் எதிர்பார்த்தது தான். ஆனால், Apple (iOS) பயனர்களிடையேயும் Gemini-க்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. Appfigures டேட்டாவின் படி, கடந்த 12 மாதங்களில் மட்டும் iOS-இல் Gemini App 137 மில்லியனுக்கும் அதிகமான முறை Download செய்யப்பட்டுள்ளது. விசேடமாக புதிய Image Generation Model ஆன ‘Nano Banana’ போன்ற அப்டேட்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.
Google Search-க்கு ஆபத்தா?
இப்போதெல்லாம் எமக்கு ஒரு சந்தேகம் வந்தால் Google-இல் Search செய்வதை விட, AI App களில் கேட்டுத் தெரிந்துகொள்வது தான் இலகுவாக இருக்கிறது. இதனால் Google Search பாவனை குறைந்துவிடுமோ என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் Google-இன் Q&A Style “AI Mode” இற்கும் இப்போது 1 பில்லியன் Users வந்துவிட்டார்களாம். இதனால் Search Queries இன்னும் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை என Google கூறுகிறது.
எப்படியோ, AI துறையில் நாளுக்கு நாள் புதுப் புது விடயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இலங்கையில் நாம் பலரும் ChatGPT மற்றும் Gemini இரண்டையுமே மாறி மாறி பயன்படுத்தி வருகின்றோம். உங்களது தனிப்பட்ட அனுபவத்தில் எந்த AI Assistant உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!
