உலகளாவிய ரீதியில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச Banking கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ரஷ்யா Cryptocurrency பாவனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக களம் இறங்கியுள்ளது. சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்காக Crypto-வை உத்தியோகபூர்வமாக பயன்படுத்தும் சட்டக் கட்டமைப்பை அந்நாடு மேலும் விரிவுபடுத்தி வருகின்றது.
கடந்த 2024 ஆம் ஆண்டில், ரஷ்யா தனது வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு Crypto Currency-ஐ பயன்படுத்துவதற்கான ஒரு பரீட்சார்த்த சட்ட கட்டமைப்பை (Experimental Legal Regime – ELR) அறிமுகப்படுத்தியிருந்தது. எனினும், அது முழுமையான சுதந்திரமான பயன்பாடாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இருந்தது.
தற்போது ரஷ்யாவின் State Duma நாடாளுமன்றம் இது தொடர்பான புதிய சட்ட ஒழுங்குமுறையை நிறைவேற்றியுள்ளது. இது எதிர்வரும் செப்டெம்பர் 1 முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த புதிய சட்டத்தால் ஏற்படவுள்ள முக்கிய மாற்றங்கள்:
- சர்வதேச வர்த்தகத்தில் அனுமதி: ரஷ்யாவின் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தங்களது வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கு நேரடியாகவே Crypto Currency-களை பயன்படுத்த முடியும்.
- நாணயத் தெரிவுகளில் சுதந்திரம்: Bitcoin (BTC), Ethereum (ETH) அல்லது USDT போன்ற குறிப்பிட்ட நாணயங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. எந்தவொரு பிரதான Crypto நாணயத்தையும், பல்வேறு Digital Wallets மூலமாகவும் வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- உள்நாட்டு கட்டுப்பாடுகள்: சர்வதேச வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், ரஷ்யாவிற்குள் வழமையான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு Crypto-வை சாதாரண பணமாக (Legal Tender) பயன்படுத்த முடியாது. அந்த தடை தொடர்ந்தும் நீடிக்கிறது.
- புதிய நிதி கட்டமைப்பு: இந்த நடைமுறையை இலகுபடுத்தும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட Crypto Exchanges, டிஜிட்டல் சொத்து களஞ்சியங்கள் (Digital Asset Repositories) மற்றும் இடைத்தரகு நிதி நிறுவனங்களுக்கான புதிய உள்கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
அரசியல் தடைகளோ அல்லது வழமையான Banking சட்டங்களோ Blockchain தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். பொருளாதார நெருக்கடிகள் வரும் போது, உலக நாடுகள் பரவலாக்கப்பட்ட (Decentralized) நிதித் தீர்வுகள் நோக்கியே நகர்கின்றன என்பதை ரஷ்யாவின் இந்த நடவடிக்கை தெளிவாக உணர்த்துகின்றது.
இந்த விடயம் பற்றிய உங்கள் கருத்து என்ன? மறக்காமல் கீழே Comment பண்ணுங்கள்!
