தொழில்நுட்ப உலகில் Cryptocurrency பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உலகளாவிய ரீதியில் பிரபலமான Emirates விமான சேவை நிறுவனம் (Airlines) ஒரு புதிய Payment Option ஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், இனி Emirates விமான டிக்கெட்டுகளை (Flight Bookings) புக் செய்யும் போது Cryptocurrency ஊடாகவும் பணத்தை செலுத்த முடியும்.
இந்த புதிய அப்டேட் (Update) பற்றிய முழுமையான விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Emirates-இன் Crypto Payment வசதி
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் வாடிக்கையாளர்கள், Emirates-இன் உத்தியோகபூர்வ இணையத்தளம் (Website) மற்றும் மொபைல் ஆப் (App) ஊடாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “Crypto.com Pay” மூலம் பேமெண்ட் (Payment) செய்ய முடியும்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் Emirates மற்றும் Crypto.com ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையிலேயே இந்த புதிய வசதி தற்போது உத்தியோகபூர்வமாக (Officially) பொதுமக்களின் பாவனைக்கு வந்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை (Digital Transactions) அதிகம் விரும்பும் இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டே இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வசதியை யாரெல்லாம் பயன்படுத்த முடியும்?
தற்போது இந்த வசதி ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE Residents) வசிப்பவர்களுக்கு மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பின்வரும் நிபந்தனைகள் உள்ளன:
- நீங்கள் கட்டாயம் ஒரு Crypto.com கணக்கை (Account) வைத்திருக்க வேண்டும்.
- உங்களது டிக்கெட்டுக்கான கட்டணம் Emirati Dirham (AED) இல் மதிப்பிடப்படும் போது மட்டுமே இந்த Crypto.com Pay option வேலை செய்யும்.
எவ்வாறு Cryptocurrency மூலம் Payment செய்வது?
இந்த புதிய Payment Gateway ஆனது மிகவும் பாதுகாப்பான முறையில் (Securely) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Website மற்றும் App ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம்.
Mobile App ஊடாக Payment செய்ய:
- வழக்கம் போல Emirates App இல் உங்களது Flight ஐ Book செய்து Checkout பகுதிக்குச் செல்லுங்கள்.
- Payment method ஆக “Crypto.com Pay” என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
- இப்போது உங்களது மொபைலில் உள்ள Crypto.com app இற்கு தானாகவே (Redirect) செல்லும்.
- அங்கே Payment ஐ Approve செய்ததும், மீண்டும் Emirates App இற்கே வந்து உங்களது Booking Confirmation மற்றும் E-ticket ஐ பெற்றுக் கொள்ளலாம்.
Website ஊடாக Payment செய்ய:
- emirates.com இணையத்தளத்தில் Booking செய்யும் போது Checkout பகுதியில் “Crypto.com Pay” ஐ கிளிக் செய்யுங்கள்.
- இப்போது உங்களது திரையில் ஒரு QR Code காண்பிக்கப்படும்.
- உங்களது மொபைலில் உள்ள Crypto.com app ஐப் பயன்படுத்தி அந்த QR code ஐ Scan செய்து Payment ஐ Approve செய்யுங்கள்.
- அவ்வளவு தான், Payment confirm ஆனதும் உங்களது E-ticket உடனடியாக வழங்கப்படும்.
ஏன் இந்த புதிய முன்னெடுப்பு?
துபாய் அரசாங்கத்தின் “Dubai Cashless Strategy” மற்றும் “D33 Economic Agenda” ஆகியவற்றின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அரச மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீதமான நிதி பரிவர்த்தனைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்திலேயே இந்த Crypto Payment வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.
பயணங்களை மேற்கொள்ளும் போது Payment செய்வதை மேலும் இலகுவாக்கும் வகையிலான இந்த புதிய அப்டேட், எதிர்காலத்தில் இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்த புதிய Cryptocurrency அப்டேட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே கொமெண்ட் (Comment) இல் பகிருங்கள். மேலும் இது போன்ற Tech Updates-களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்!
