எலான் மஸ்க் (Elon Musk) X தளத்தை (முன்பு Twitter) வாங்கியதில் இருந்து பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து வருகிறதை நாமெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் ஆரம்பத்திலிருந்தே X-ஐ ஒரு “Everything App” ஆக (அதாவது சீனாவில் உள்ள WeChat போல எல்லாவற்றுக்குமான ஒரு app ஆக) மாற்றப்போவதாக அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்த வகையில் அவரது அடுத்த அதிரடி பாய்ச்சல் தான் இந்த “X Money”. ஆமாம், இனி X app ஊடாகவே Banking மற்றும் Financial சேவைகளை அமெரிக்காவில் (US) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார். இலங்கையில் இருந்து இதை நாம் பார்க்கும்போது, “ஒரு Social Media தளத்தில் வங்கிச் சேவைகளா?” என்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இது பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம் வாங்க!
X Money என்றால் என்ன?
இது X தளத்தினுள் இயங்கும் ஒரு முழுமையான Payment மற்றும் Financial Service ஆகும். சாதாரணமாக நாம் வங்கி கணக்குகளை வைத்து என்னென்ன செய்வோமோ, அநேகமானவற்றை இதன் ஊடாகவும் செய்ய முடியும். Peer-to-peer payments, digital wallet வசதிகள் என பல விடயங்கள் இதனுள் அடங்குகின்றன.
யாருக்கு இது கிடைக்கும்?
தற்போது இந்த X Money சேவையானது அமெரிக்காவில் (US) உள்ள X Premium மற்றும் Premium+ Subscribers-க்கு மாத்திரம் தான் அறிமுகமாகியுள்ளது. சில மாதங்களாக Invite-only beta-வில் இருந்த இந்த வசதியை, இப்போது உத்தியோகபூர்வமாக விரிவுபடுத்தியுள்ளார்கள். மற்றவர்களுக்கும் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது, ஆனாலும் நம்ம இலங்கைக்கு எப்போ வரும்னு இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது!
இதன் முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன?
- Free & Instant Transfers: X பாவனையாளர்களுக்கு இடையில் எந்தவிதமான Fees-உம் இல்லாமல் உடனடியாக பணத்தை அனுப்பவும் (Send) பெறவும் முடியும்.
- பிரத்தியேக X Card: பாவனையாளர்களுக்கு என பிரத்தியேகமான ஒரு Metal Visa debit card-ஐ வழங்குகிறார்கள். இதில் நம்ம X username-ஐ கூட print பண்ணிக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம். அத்தோடு Apple Pay மற்றும் Google Pay-லும் (Virtual card ஆக) இதனை இணைத்துக்கொள்ள முடியும்.
- Cashback & Interest (வட்டி): Premium+ பாவிப்பவர்களுக்கு Deposit-களின் மீது 6% APY (Annual Percentage Yield) வரை Interest கிடைக்கும். அத்தோடு X Card மூலம் செய்யும் Eligible purchases-களுக்கு 3% cashback-உம் தருகிறார்கள்.
- Early Deposits: மாதச் சம்பளத்தை (Direct Deposits) வழமையான நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே X Money account-இல் பெற்றுக்கொள்ள முடியும்.
- இவை தவிர Wire transfers, Physical cheques, மற்றும் ATM-களில் இலவசமாக பணத்தை எடுக்கும் வசதி (Free ATM withdrawals) போன்றவையும் இதில் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பு மற்றும் வங்கித் தொடர்பு (Security & Banking)
“இது வெறும் Social Media app தானே, இதில் எப்படி பணத்தை நம்பிப் போடுவது?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்காக Cross River Bank என்ற அமெரிக்க வங்கியுடன் X நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதிலுள்ள பணத்திற்கு $250,000 வரை FDIC காப்புறுதியும் (Insurance) உள்ளதால், வங்கிகளுக்கு நிகரான பாதுகாப்பை இது வழங்குகிறது.
மேலும், வழமையான Password-களுக்குப் பதிலாக மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கும் “Passkeys” தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாலும், Visa-வின் Risk Management அமைப்புகளைப் பயன்படுத்துவதாலும், Security-ம் மிக பலமாக இருக்கும் என X நிறுவனம் சொல்கிறது.
இது வெற்றி பெறுமா?
ஏற்கனவே PayPal என்ற பிரம்மாண்டமான Payment System-ஐ ஆரம்ப காலத்தில் உருவாக்கியதில் எலான் மஸ்க்குக்கு பெரிய பங்கு உண்டு. இப்போது மீண்டும் அதே துறைக்குள், ஆனால் இம்முறை ஒரு Social Media தளம் ஊடாக நுழைந்திருப்பது Tech உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. PayPal, Venmo, Cash App போன்றவற்றுக்கு இது ஒரு பெரிய போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த X Money திட்டம் அமெரிக்காவில் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் உலகெங்கும் (இலங்கை உட்பட) விரிவடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
உங்களது கருத்துக்கள் என்ன? ஒருவேளை இலங்கையிலும் X-இல் இந்த மாதிரி வங்கிச் சேவைகள் வந்தால் நீங்கள் பயன்படுத்துவீர்களா? உங்களது கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!
