இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கோடும், சர்வதேச AI வரைபடத்தில் இலங்கையை ஒரு முக்கிய கேந்திர நிலையமாக (Regional AI Hub) மாற்றும் வகையிலும் “Sri Lanka AI Week 2026” தேசிய மாநாடு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை டிஜிட்டல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy), GovTech Sri Lanka மற்றும் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான SLT-MOBITEL ஆகியன இணைந்து இந்த பிரம்மாண்ட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 4 வரை கொழும்பில் பல்வேறு இடங்களில் இந்த AI வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
‘AI Amplified’ – நிகழ்வின் பிரதான கருப்பொருள்
சென்ற வருடம் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட முதலாவது தேசிய AI உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, இந்த முறை ‘AI Amplified’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச மற்றும் பிராந்திய பங்காளர்களுடன் இணைந்து இது இன்னும் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வெறும் தொழில்நுட்ப நுகர்வோராக (Consumers) மட்டும் இராமல், நவீன AI தீர்வுகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களாக (Producers) எமது நாடு மாற வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும். அத்துடன், உள்ளூர் IT/BPM துறையை AI மற்றும் R&D ஊடாக வலுப்படுத்தி, நாட்டின் தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி வருவாயை $5 பில்லியன் (US$ 5 Billion) ஆக உயர்த்துவதும், 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை $15 பில்லியனாக விரிவுபடுத்துவதும் இதன் முக்கிய இலக்குகளாகும்.
ஒரு வாரத்தில் என்னென்ன நடக்கவுள்ளது?
இந்த 7 நாள் மாநாட்டில் கொள்கை வகுப்பாளர்கள் (Policymakers), உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள், உள்ளூர் தொழில்முயற்சியாளர்கள் (Startups), பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் ஒன்றிணையவுள்ளனர். நிகழ்வு 4 முக்கிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:
- AI Leaders Night (செப்டம்பர் 28): சர்வதேச நிபுணர்கள், அரச தலைவர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கான (C-Level Executives) விசேட கலந்துரையாடல் மற்றும் Networking நிகழ்வு.
- AI Conference (செப்டம்பர் 29 – 30): உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் Keynotes, Panel Discussions மற்றும் நிறுவனங்களின் Enterprise Transformation தொடர்பான ஆழமான அமர்வுகள்.
- National AI Expo (அக்டோபர் 2 – 3): பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அனுமதி இலவசமாக வழங்கப்படும் மாபெரும் கண்காட்சி. இதில் சுகாதாரம், கல்வி, உற்பத்தி மற்றும் நிதித்துறைகளில் பயன்படுத்தப்படும் நேரடி AI தீர்வுகள் காட்சிப்படுத்தப்படும்.
- National AI Awards (அக்டோபர் 4): இலங்கையில் AI தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சாதனை படைத்த நிறுவனங்கள், Startups மற்றும் தனிநபர்களை கௌரவிக்கும் விருது வழங்கல்.
புதிதாக அறிமுகமாகியுள்ள SMART AI & AI Hub
இந்த நிகழ்வின் ஓர் அங்கமாக, SLT-MOBITEL நிறுவனத்தினால் இரண்டு முக்கிய தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
- SMART AI: தெற்காசியாவின் முதலாவது AI Tokenisation தளம். இதன் மூலம் பயனர்கள் தங்களது தொலைபேசி இணைப்பு ஊடாகவே எளிதாகவும் குறைந்த செலவிலும் சர்வதேச AI Tools-களுக்கான token-களை பெற்றுக்கொள்ள முடியும்.
- AI Hub: மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்துறையினரை ஒரே குடையின் கீழ் இணைக்கும் தேசிய அளவிலான கூட்டுத் தளம் (National Engagement Platform).
இலங்கையின் Tech Ecosystem-ஐ உலகத் தரத்திற்கு உயர்த்தவும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளை எமது இளைஞர்களுக்கு உருவாக்கவும் இந்த ‘Sri Lanka AI Week 2026’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
