தலைப்பு: Google Gemini யின் Personalized AI Image Generation இப்போது Free!

Share or Print this:

வணக்கம் நண்பர்களே! இன்னுமொரு புதிய Tech அப்டேட்டுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. AI உலகில் Google நிறுவனம் நாளுக்கு நாள் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் Google Gemini பாவனையாளர்களுக்கு (Users) ஒரு சிறப்பான செய்தியை Google தற்போது வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் Google AI Plus, Pro போன்ற Paid Subscription-இல் மட்டுமே பயன்படுத்த முடிந்த Gemini-யின் ‘Personalized AI Image Generation’ வசதியை இப்போது இலவசமாக (Free tier) வழங்க Google முன்வந்திருக்கிறார்கள்.

Personalized AI Image Generation என்றால் என்ன?

வழமையாக நாம் ChatGPT அல்லது வேறு AI Tools-ல் ஒரு Image-ஐ generate செய்ய வேண்டும் என்றால், நாம் நினைக்கும் அந்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக, நீளமான ஒரு Prompt ஆகக் கொடுக்க வேண்டும். ஆனால் Google-இன் இந்த புதிய வசதி அப்படி இல்லை.

இது Google-இன் Personal Intelligence மற்றும் புதிய “Nano Banana” image model தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நீங்கள் அனுமதி வழங்கினால் (Opt-in), Gemini நேரடியாக உங்களது Google Photos, Gmail, Search History மற்றும் YouTube போன்றவற்றில் இருந்து உங்களுடைய விருப்பங்கள் மற்றும் ரசனைகளைத் தானாகவே புரிந்துகொள்ளும்.

உதாரணமாக, நீங்கள் “Design my dream house” (எனது கனவு இல்லத்தை வடிவமைத்துத் தா) என்று ஒரு சிறிய Prompt கொடுத்தாலே போதும். அது உங்களது Google Account-ல் உள்ள தரவுகளை ஆராய்ந்து, உங்களுக்குப் பிடித்தமான நிறங்கள், டிசைன்களை வைத்து ஒரு அருமையான Image-ஐ உருவாக்கித் தரும். அதேபோல “Create an illustration of me and my favourite things” என்று கேட்டால், உங்களது Google Photos-ல் உள்ள படங்களை வைத்து, நீங்களே படங்களை upload செய்யாமலேயே உங்களுக்கான உருவத்தை வரைந்து தரும்.

எமது Privacy பாதுகாக்கப்படுமா?

உங்களது தனிப்பட்ட விபரங்கள் AI இனால் எடுக்கப்படுவதால் Privacy பற்றிய பயம் வரலாம். ஆனால் இது முழுக்க முழுக்க “Opt-in” முறையில் தான் செயல்படுகிறது. அதாவது, நீங்கள் Settings-ல் சென்று அனுமதி (Permission) கொடுத்தால் மட்டுமே Gemini உங்களது தனிப்பட்ட Google Apps-ஐ அணுக முடியும். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் Tools menu-வில் சென்று இதை Off செய்து கொள்ள முடியும். அத்தோடு, உங்களுடைய தனிப்பட்ட படங்களை வைத்து AI-ஐ Train பண்ண மாட்டோம் எனவும் Google உறுதியாகத் தெரிவித்துள்ளது.

இது யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த சந்தோசமான செய்தியில் ஒரு சிறிய கவலையான விடயமும் இருக்கிறது. தற்போதைக்கு இந்த இலவச வசதி அமெரிக்காவில் (US) வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற ஏனைய நாடுகளில் உள்ள பாவனையாளர்களுக்கு இது எப்போது Free ஆகக் கிடைக்கும் என்ற உத்தியோகபூர்வ (Official) அறிவிப்புகளை Google இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும், கூடிய விரைவில் இது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

ChatGPT மற்றும் Apple Intelligence-க்கு கடும் போட்டியை வழங்கும் வகையிலேயே Google தமது மிகப்பெரிய பலமான “Data Ecosystem”-ஐப் பயன்படுத்தி இந்த அப்டேட்டை செய்திருக்கிறார்கள்.

இந்த புதிய AI Feature பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது இலங்கைக்கு வரும்போது பயன்படுத்துவீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே கமெண்டில் சொல்லுங்கள். மற்றும் ஒரு பயனுள்ள Tech பதிவுடன் சந்திக்கிறேன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *