Tech மற்றும் Aviation செய்திகளைத் தொடர்ந்து அவதானிப்பவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்குது. உலக வரலாற்றிலேயே ஆகாயத்தில் அதிகளவான விமானங்கள் பறந்த நாளாக கடந்த ஜூலை 23, 2026 பதிவாகியிருக்குது.
Flightradar24 தளம் வெளியிட்டுள்ள Data-வின் படி, அன்றைய தினத்தில் மாத்திரம் உலகம் முழுவதும் 153,359 Commercial Flights (வணிக விமானங்கள்) பறந்து புதிய சாதனையை நிலைநாட்டியிருக்குது. நாளுக்கு நாள் விமானப் பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகின்ற இந்தச் சூழலில், இது Aviation Industry-ல் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.
287,364 Total Flights – வானில் ஒரு Traffic Jam!
இங்கு இன்னுமொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், இந்த 1,53,359 என்பது வெறும் Commercial passenger மற்றும் Cargo Flights-களின் எண்ணிக்கை மாத்திரம்தான். Private jets, Military flights, Helicopters மற்றும் ஏனைய அனைத்து விமானங்களையும் (Total Flights) கணக்கில் எடுத்தால், அன்றைய தினத்தில் மொத்தமாக 287,364 விமானங்கள் Flightradar24 தளத்தினால் கண்காணிக்கப்பட்டிருக்குது. ஒரே நாளில் வானத்தில் எந்தளவுக்கு Air traffic இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!
ஏன் இந்த ஜூலை மாதத்தில் இவ்வளவு பரபரப்பு?
ஏன் திடீரென 23.07.2026 அன்று இவ்வளவு விமானங்கள் பறந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். பொதுவாகவே Northern Hemisphere (வட அரைக்கோளம்) நாடுகளில் July கடைசி வாரமும் August மாதமும் கோடைகால விடுமுறை (Summer vacation) சீசன். இதன்போது மக்கள் அதிகளவில் Travel செய்ய ஆரம்பிப்பார்கள்.
விமான நிலையங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயணிகளின் தேவையை சமாளிக்க, Airlines தங்களது உச்சகட்ட Flights-களை (Peak summer schedules) இந்தக் காலப்பகுதியில் தான் அதிகளவில் Operate செய்யும். இதனால் தான் இந்த Record சாத்தியமாகியிருக்குது.
Flightradar24 எவ்வாறு இயங்குகிறது?
நாம் சாதாரணமாக பார்க்கும் போது இந்த Data வெறும் எண்களாகத் தெரியலாம், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு மிகப்பெரிய செயற்பாடு. Flightradar24 போன்ற தளங்கள் உலகெங்கிலும் உள்ள ADS-B (Automatic Dependent Surveillance–Broadcast) receivers, சாட்டிலைட் தரவுகள் மற்றும் Radar தகவல்களை ஒருங்கிணைத்தே இந்த விமானங்களின் நகர்வுகளை மிகத்துல்லியமாக Track செய்கின்றன.
ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான Data points-ஐ Process செய்து Live-ஆக நமக்கு தகவல்களை வழங்குவது, Data processing தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ச்சியடைந்திருக்குது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
கோடைகாலம் முடிவதற்குள் இந்த Record மீண்டும் முறியடிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
நீங்களும் ஆகாயத்தில் பறக்கும் விமானங்களை Live-ஆக பார்க்க விரும்பினால், Flightradar24 App அல்லது Website ஊடாக Track செய்து பார்க்கலாம்.
இதேபோன்று இன்னுமொரு சுவாரஸ்யமான Tech தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்.
