பிரேசிலின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தை உடனடியாக, நாடு தழுவிய ரீதியில் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இத் தடையுத்தரவு காலப் பகுதிக்குள் பிரேசிலுக்குள் X தளத்தை பயன்படுத்த VPN பயன்படுத்துவோருக்கு நாளொன்றுக்கு 50,000 பிரேசில் ரெயல் (சுமார் 8900 டாலர்) அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறப்படும் கணக்குகளை அகற்றுமாறு நீதிமன்ற எக்ஸ் நிருவாகத்தை வேண்டியிருந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் அதனைத் புறக்கனித்தது. கட்டுப்படற்ற தகவல் பரிமாற்றம் தொடர்பிலேயே இந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் பிரேசில் உச்ச நீதிமன்றம், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை அடுத்த 24 மணி நேரத்தில் நியமிக்க வேண்டும். தவறினால் பிரேசில் எக்ஸ் நிறுவனம் முடக்கப்படும் என உத்தரவிட்டு இருந்தது.
பிரேசில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் ஏற்க எலன் மஸ்க் மறுத்துவிட்டார். இதனையடுத்து, எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 24 மணிநேரத்திற்குள் எக்ஸ் தளத்தை பிரேசில் நாட்டிலிருந்து முடக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நீதிபதி அலெக்ஸ்ண்ட்ரே டி மோரேஸ் உத்தரவிட்டார்.
