X தளத்தில் Verified கணக்குகளுக்கு வழங்கப்படும் நீல நிற சரி அடையாள்ளத்தை (Verified Blue tick) குறிப்பிட்ட சில வரைமுறைகளுக்கு உற்பட்டு பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2500 இற்கு மேற்பட்ட Verified கணக்குகளால் Follow செய்யப்படும் X கணக்குகளுக்கு இலவாமாக Verified Blue tick (X Premium) வசதியை வழங்குவதாகவும். அத்தகைய 5000 இற்கு மேற்பட்ட Verified கணக்குகளால் Follow செய்யப்படும் X கணக்குகளுக்கு இலவாமாக X Premium + Verified Blue tick ஐ வழங்குவதாகவும் Elon Musk தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளர்.
Going forward, all 𝕏 accounts with over 2500 verified subscriber followers will get Premium features for free and accounts with over 5000 will get Premium+ for free
— Elon Musk (@elonmusk) March 28, 2024
முன்பு Verified கணக்குகள் மிகப் பிரபல்யமானவர்களுக்கு மாத்திரமே இருந்தது. அதனால் அத்தகைய கணக்குகள் தொடட்பிலான நம்பகத் தன்மை அதிகமாக இருத்தது. என்றாலும் Verified கணக்குகளை கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்த மதிப்பும், நம்பகத் தன்மையும் Verified கணக்குகள் மீது குறைந்துள்ளமை மறுக்க முடியாத் உன்மை எனலாம்.
