இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://moe.gov.lk/ தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இணையத்தளம் Hack செய்யப்படது. ஹொஸ்டிங் கணக்கு மீற்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. என்றாலும் இது வரை இணையத்தளம் வழமைக்குத் திரும்பவில்லை.
கல்வி அமைச்சின் இணையத்தளம் இதற்கு முன்னரும் Hack செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம் முறை ஹெக் செய்த நபர் தன்னை Anonymous EEE என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். அத்தோடு Hack செய்த போது தளத்தில் அது குறித்து செய்தியொன்றையும் பதியப்பட்டிருந்தது.

அதில் பின்வருமாறு பதியப்பட்டிருந்தது…
“My name is Anonymous EEE and I am currently studying A/l. Sorry for unauthorized access to your website but your website has some security flaws.As a Sri Lankan citizen I am reporting this for the safety of my country. fix it thanks”
“எனது பெயர் Anonymous EEE. நான் தற்போது உயர்தரக்கல்வி கற்று வருகிறேன். உங்கள் இணையதளத்தை ஊடுருவியமைக்கு மன்னிக்கவும். எனினும், உங்கள் இணையதளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இலங்கைப் பிரஜை என்ற வகையில் எனது நாட்டின் பாதுகாப்பிற்காக இதனைத் தெரிவிக்கின்றேன். அதை சரி செய்யவும். நன்றி”
உன்மையும் இது தான், இலங்கையின் அரச இணையத்தளங்கள் பெரும்பாலானவை மிக மோசமான பாதுகாப்புக் குறைபாடுகளுடன் காணப்படுகின. இத்தகைய நிலை மக்கள் மத்தியில் அரசின் Online சேவைகள் தொடர்பான நம்பகத் தன்மையைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
