ஜப்பானிய கிரிப்டோ பரிமாற்றமான DMM Bitcoin இல் கடந்த வெள்ளிக்கிழமை 4,502.9 Bitcoinகள், இன்னுமொரு வையில் சொல்லப்போனால் சுமார் 305 மில்லியன் டாலர் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளது.
கிரிப்டோ பாதுகாப்பு நிறுவனமான Elliptic இன் படி, இது வரலாற்றில் எட்டாவது பெரிய கிரிப்டோ திருட்டு ஆகும்.
இ சம்பவம் தொடர்பில் DMM Bitcoin கடந்த வெள்ளிக்கிழமை தனது உத்தியோகபூர்வ வளைப் பதிவில் பின்வருமாறு பதிந்திருந்தது “31 May 2024 வெள்ளிக்கிழமை பி.ப. 1:26 மணியளவில் எமது BTC வொலட் (Wallet) இல் சட்டவிரோதமான திருட்டை அவதனித்தோம். நாம் இது தொடர்பில் பரிசோதித்து வருகிறோம். மேலும் உரிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்…” என அந்த பதிவு தொடர்கிறது.

அத்தோடு களவாடப்பட்ட Bitcoin களுக்கான பொறுப்பை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு. Bitcoin வைப்புக்களின் எவ்வித மாற்றமும் நிகழாமல் இருக்கிம் என நிறுவனம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.
எது எவாறாயினும், இத்தகைய சம்பவங்கள் கிரிப்டோ கரன்சி மற்றிம் இணையவழிபி பரிமாற்ற்ங்கள் தொடர்பான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் பாதிப்ப ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது.
