Waze செயலியில் புதிதாக அறிமுகமாகியுள்ள 5 AI வசதிகள்: இனி Driving மிகவும் சுலபம்!

Share or Print this:

நம்மில் அதிகமானோர் வாகனங்களில் பயணிக்கும் போது Google Maps பாவிப்பது வழக்கம். ஆனால், அதற்குச் சிறந்ததொரு மாற்றீடாக Waze App ஐயும் இலங்கையில் பலர் உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது AI (Artificial Intelligence) தொழில்நுட்பம் எல்லா இடங்களிலும் பரவி வரும் நிலையில், Waze நிறுவனமும் தனது App-இல் Google இன் Gemini AI ஐப் பயன்படுத்தி 5 புதிய சிறப்பம்சங்களை (Features) அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அப்டேட்கள் மூலம் நமது Driving அனுபவம் எப்படி மாறப்போகிறது என்பதைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.

1. உங்களுக்காகவே பிரத்தியேகமான பாதைகள் (Personalized Navigation) வழக்கமாக Map-கள் எது Short route என்பதையே நமக்குக் காட்டும். ஆனால், புதிய AI அப்டேட் மூலம், நீங்கள் கடந்த காலங்களில் எந்த மாதிரியான பாதைகளை அதிகம் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்பதை ஆராய்ந்து Waze உங்களுக்கான வழியைக் காட்டும். உதாரணமாக, உங்களுக்கு அதிக சிக்னல்கள் இல்லாத Highway ஊடாக பயணிக்கவே பிடிக்கும் என்றால், Waze அந்த வழிக்கே இனி முன்னுரிமை அளிக்கும். விருப்பம் இல்லையென்றால் இதை Settings-இல் சென்று Off செய்துகொள்ளவும் முடியும்.

2. பாட்டு கேட்பவர்களுக்கு “Less Chatty Mode” வாகனம் ஓட்டும்போது உங்களுக்குப் பிடித்த பாட்டு அல்லது Podcast கேட்டுக்கொண்டு போவது பலருக்கும் பிடிக்கும். ஆனால் Map-இல் அடிக்கடி “Turn left”, “Go straight” என Voice prompt வந்து தொந்தரவு செய்தால் எரிச்சலாக இருக்கும் அல்லவா? இதற்காகவே Waze-இல் ‘Less Chatty Mode’ அறிமுகமாகியுள்ளது. இதை On செய்தால், மிகவும் அவசியமான திருப்பங்கள் மற்றும் வீதி ஆபத்துக்களை (Hazards) மட்டுமே Voice மூலம் சொல்லும். இதனால் தேவையற்ற தொந்தரவுகள் குறையும்.

3. பேசியே தேடலாம் (Gemini-powered Conversational Search) இனி வாகனத்தை ஓட்டிக்கொண்டு மொபைலில் கஷ்டப்பட்டு Type பண்ண வேண்டியதில்லை. Voice icon-ஐ அழுத்தி, சாதாரண மொழியிலேயே “இப்போது திறந்திருக்கும் ஒரு Coffee shop ஐ காட்டு” என்றோ, அல்லது “குறைந்த விலையில் பெற்றோல் அடிக்கக்கூடிய Shed ஒன்றைக் காட்டு” என்றோ சொன்னால் போதும். Gemini AI அதைச் சரியாகப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறந்த இடங்களை Screen-இல் List பண்ணும்.

4. Map-ஐ Update செய்யவும் பேசினாலே போதும் (Conversational Reporting) வீதியில் செல்லும் போது ஒரு பாதையை மூடியிருந்தாலோ அல்லது விபத்து நடந்திருந்தாலோ, அதை Waze இல் ரிப்போர்ட் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். தற்போது இதை வாய்ஸ் மூலமாகவே சாதாரணமாக, “இந்த வீதி மூடப்பட்டுள்ளது” என்று கூறினால் போதும், Waze அதை உள்வாங்கி உள்ளூர் Map Editor களுக்கு அனுப்பி உறுதி செய்து, உடனடியாக Map-ஐ Update செய்துவிடும்.

5. பைக் ஓட்டுபவர்களுக்காகவே “Motorcycle Mode” பைக் ஓட்டுபவர்கள் கார்கள் செல்லும் வீதிகளில் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு குறுக்கு வீதிகள் மற்றும் ஒடுங்கிய பாதைகள் கூடப் போதுமானது. இதனைக் கருத்தில் கொண்டு, Motorcycle களுக்கென சிறப்பான Route களைக் காட்டும் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீதியில் உள்ள குழிகள் (Potholes), வேகக்கட்டுப்பாட்டுத் தடைகள் (Speed bumps) போன்ற ஆபத்துக்களையும் முன்கூட்டியே இது அறிவுறுத்தும். இந்த வசதி தற்போது மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அறிமுகமாகியுள்ளது, வெகு விரைவில் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கும் வரவுள்ளது.

முடிவுரை: இந்த புதிய AI வசதிகள் Android மற்றும் iOS பயனர்களுக்கு தற்போது globally வெளிவந்து கொண்டிருக்கிறது (Rollout). நீங்கள் Google Maps இற்கு பதிலாக Waze ஐ அதிகம் பாவிப்பவர் என்றால், உங்களது App-ஐ Update செய்து இந்த புதிய வசதிகளை நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்கள்.

இந்த புதிய அப்டேட்கள் பற்றிய உங்களது கருத்துக்களைக் கீழே Comment-இல் பகிர்ந்துகொள்ளுங்கள்!

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *