StarLink சேவைக்கு TRCSL அனுமதி

Share or Print this:

STAR LINK இணையச் சேவயை இலங்கைக்குள் செயற்படுத்துவதற்கான அனுமதியை இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் மிகப் பிரபல்யமான STAR LINK இணையச் சேவை இலங்கக்குள் நுழைவது தொடர்பில் கடந்த சில வாரங்களாக முக்கியமாகப் பேசப்பட்டது. ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்ஹவின் இந்தோனேசிய விஜயத்தின் போது STAR LINK நிறுனர் எலொன் மஸ்க் உடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இச் சேவையை இலங்கையில் அறிமுகப் படுத்த போவதாக பேசப்பட்டது.

என்றாலும், இதற்கான இலங்கையர்களுக்கான முன்பதிவு சேவையில் பதிவு செய்யும் வசதி 2021 ஆம் ஆண்டிலிருந்தே STAR LINK இனையத்தளத்தில் வழங்கப்பட்டிருந்ததோடு, 2024 இல் இலங்கையில் அற்முகமாகும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2021 இல் இலங்கையி இச் சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பிலான இயழுமைகளைப் பரிசீலிப்பதற்கான அனுமதியை பாராளுமன்றம் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *