உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள்: வணிக நிறுவனங்கள் பாதிப்பு

Share or Print this:

Windows இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரபல மென்பொருள் நிறுவனமான Microsoft நிறுவனத்தின் Windowsல் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியுள்ளன. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் கோளாறு ஏற்படக் காரணம் என சொல்லப்படுகிறது.

இதனால் Windows பயனர்களின் சிஸ்டம்களில் Blue Screen of Death (BSOD) ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக Micrsoft நிறுவனத்தின் கூற்றுப்படி Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் ஆகாசா ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதனால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அதேபோல், Windows சேவை பாதிப்பால் உலகலாவிய ரீதியில் சில விமான நிலையங்களிலும் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் சேனல் முடக்கம்: லண்டனை சேர்ந்த Sky News சேவை Windows சேவை பாதிப்பால் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. Sky News ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஜாக்கி பெல்ட்ராவ் இதனை X தளத்தில் பகிர்ந்து “ஒளிபரப்பை தொடர முயற்சித்து வருகிறோம்” என்றுள்ளார்.

வங்கிகள், விமான நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், டிவி, ரேடியோ மற்றும் பல்பொருள் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட வணிகங்கள் என உலகம் முழுவதும் Windows சாப்ட்வேர் குளறுபடியால் பாதிப்பை சந்தித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் Windows சேவைகள் முடங்கிய நிலையில், அந்நாட்டு அரசு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *