Elon Musk கைக்கு Twitter (இப்ப X) போனதுல இருந்து ஒவ்வொரு நாளும் ஏதாச்சும் ஒரு புது update வந்துக்கிட்டே தான் இருக்கு எண்டு நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த வகையில, அண்மையில X நிறுவனம் தங்களுடய புதிய chat app ஆன ‘XChat’ ஐ உத்தியோகபூர்வமா வெளியிட்டு இருக்கிறாங்க. Tech உலகத்துல இப்போ இதுதான் hot topic ஆகப் போய்க்கிட்டு இருக்கு.
வழமையா நாங்க WhatsApp, Telegram, Messenger எண்டு பல messaging apps பாவிச்சிட்டு இருக்கோம். ஆனா, இந்த XChat மூலமா நேரடியாக X தளத்துல இருக்குற users கூட மிகவும் இலகுவாகவும், பாதுகாப்பாகவும் chat பண்ணக்கூடிய வசதியை அவங்க கொடுத்திருக்காங்க.
இதோட User Interface (UI) ரொம்பவே simple ஆக டிசைன் பண்ணப்பட்டிருக்கு. அத்தோடு, Audio மற்றும் Video calls, குழுக்களாக இணைந்து உரையாடும் Groups வசதி, மற்றும் end-to-end encryption போன்ற பல privacy features ஐயும் இதுல உள்ளடக்கி இருக்கிறதா சொல்லப்படுது.
இலங்கை பயனர்களுக்கு இது எந்தளவு பயனுள்ளது?
இலங்கையிலயும் இப்ப நிறைய பேர் செய்திகள், Tech updates மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிஞ்சுக்க X தளத்தை அதிகமா பாவிக்கத் தொடங்கிட்டாங்க. அதனால இந்த XChat வசதி எமக்கு இன்னும் இலகுவா தகவல்களை நண்பர்களோட பறிமாறிக்கொள்ள உதவியா இருக்கும்.
அதுமட்டுமில்லாம, எதிர்காலத்துல ஒரு “Everything App” ஆக X ஐ மாத்துறதுக்கான Elon Musk ஓட திட்டத்துல இது ஒரு முக்கியமான படி எண்டே சொல்லலாம். இனி வரும் காலங்கள்ல இது WhatsApp, Telegram போன்றவற்றுக்கு ஒரு பெரிய போட்டியா வரவும் அதிக வாய்ப்பு இருக்கு.
நீங்க ஏற்கனவே X தளத்தை தொடர்ச்சியாக பாவிக்கிற ஒருத்தரா இருந்தா, கண்டிப்பா இந்த XChat வசதியை try பண்ணிப் பாருங்க. உங்களோட X app ஐ update பண்ணி செக் பண்ணிப் பாருங்கள்.
இந்த புதிய XChat app பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது WhatsApp க்கு சிறந்த ஒரு மாற்றாக அமையுமா? உங்களது கருத்துக்களை கீழ comment ல சொல்லுங்க.
