சிறுவர்களுக்கான யூடியூப் – Kids Tube

Share or Print this:
Smart கைபேசி பாவனையாளர்களுக்கு உள்ள  ஆயிரம் பிரச்சினைகளில் ஆயிரத்து ஓராவது பிரச்சினை தான் வீட்டில உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இப்போது நிறையப் பேர் “ஆமால்ல..” என்பார்கள்.
ஆம், குழந்தைகள் எமது மொபைல் சாதனங்களை கையால்வது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது. அதிலும் YouTube இன் பங்கு மிகவும் அதிகமாகும். பெரும்பாலான குழந்தைகள் கைபேசி கையில் கிடைத்ததும் YouTube ஐயே தேசிச் செல்கின்றனர். என்றாலும்  அது எந்த அளவு பாதுகாப்பானது அல்லது ஆரோக்கியமானது என்பது கேள்விக் குறிதான்.
செயலியைத் திறக்கும் போதே வேறுபட்ட வீடியோக்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன், எமது பயன்பாடுகளுக்கமைய அவற்றோடு தொடர்புடைய வீடியோக்களும் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். அதே போல Search செய்யும் போது தவறுதலாக வழங்கப்படும் Keyword கள் மூலம் பிழையான தேடல் முடிவுகளையும் பார்க்க நேரிடுகிறது. இதனால் பெரும்பாலானோர் குழந்தைகள் YouTube பயன்படுத்துவதை அனுமதிப்பதில்லை.
இந்த சிக்கல்களுக்கு தீர்வாக YouTube அறிமுகம் செய்துள்ள செயலியே Kids Tube ஆகும். சிறுவர்களுக்கேயான வீடியோக்களை மாத்திரம் காட்சிப்படுத்துகிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ப Search செய்யும் வசதியை வழங்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியும். தவறுதலாக Search செய்யப்பட்டாலும் சிறுவர்களுக்கு பொருத்தமான வீடியோக்களை மாத்திரமே காட்சிப்படுத்தும்.இந்த செயலி Android மற்றும்  Apple iOS இரண்டிற்குமாக தயாராக உள்ளது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *