Android Mobile OS உள்ள கையடக்கத் தொலைபேசிகள் அதனை வைத்துள்ளவர் எதிர்பார்க்கும் அனத்து சேவைகளையும், அதற்கு அதிகமாகவும் வழங்குகிறது என்றால் மிகையாகாது. அந்த உறுதி நிலையை Android Market (market.android.com) இல் உள்ள Apps மூலமே அடைகிறது. Android Market அறிமுகமாகிய ஆரம்ப கட்டதில் அதன் தளத்தில் குறிப்பிட்ட சில Apps மாத்திடரமே கானப்பட்டன. 2009 ஆம் ஆண்டில் அது 2300 எனும் அளவிலேயே காணப்பட்டது. 2011 ஒக்டோபர் மாதத்தில் Android Market இல் இருந்த Apps களின் என்னிக்கை 319,000 என குறிப்பிடப் படுகிறது. அது 2011 கடைசிக் கட்டமாகும் போது 350,000 ஐ தாண்டி இருக்கும் என கூறப்பட்டது. அது மாத்திரமன்றி 2011 இன் இறுதியில் இந்த Android Market இலிருந்து பதிவிரக்கப்பட்ட (Download செய்யப்பட்ட) Apps களின் என்னிக்கை 10 பில்லியன் என அறிவிக்கப்படுகிறது.
Android இன் முதலாவது வணிக நோக்கிலான பதிப்பு Android 1.0 ஆகும். அது 2008 செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த Android Mobile OS மூலம் இயங்கிய முதலாவது கையடக்கத் தொலைபேசி HTC Dream – G1 வகை சேர்ந்த Smart Phone ஆகும். அன்று முதல் தொடர்ந்து பல்வேறு பதிப்புகள் வெளியாகின. அவை உணவுப் பண்டங்களின் மூலமே குறிக்கப்பட்டன. ஆங்கில அகர வரிசையில் அவை அமைந்திருந்தன. கப் கேக் (CupCake), டோனட் (Donut), இக்லெயா (Éclair), ஃப்ரோயோ (Froyo), ஜிஞ்ஜர் ப்ரட் (Ginger Bread), ஹனி கொம்ப் (Honey Comb) மற்றும் ஐஸ்கிரீம் சேன்விச் (Ice Cream Sandwich) என்பனவே அவையாகும்.
ஐஸ்கிரீம் சேன்விச் (Ice Cream Sandwich) எனும் Android 4.0 பதிப்பே அதன் மிகப் பிந்திய வெளியீடாகும். 2011 நவம்பர் 28 ஆம் திகதி இது வெளியானது.
அத்தோடு இன்று உலகில் பாவனையில் உள்ள Tablet PC களில் 17% வையில் இந்த Android Mobile OS பயன்படுத்தப்படுவதோடு, கையடக்கத் தொலைபேசிகளில் இதன் பங்கு 43% ஐ தாண்டி விட்டது. பெயரைச் சொன்னவுடன் யாவரும் தெரிந்து கொள்ளும் ஒரு Mobile OS இருக்குமாயின் அது Android Mobile OS மட்டும் தான் எனலாம். இது இந்த அளவு பிரபல்யம் ஆவதற்கு இதன் திறன் மாத்திரம் துனை நின்றது என கூற முடியாது, மாறாக இந்த Android Mobile OS கையடக்க தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுவதும் ஒரு காரனமகும்.
Android Mobile OS ஐ இலவசமாக வழங்கும் Google நிறுவனம் இலாபம் ஈட்டுவது, Android Market மூலம் Apps விற்பனை செய்வதன் மூலமாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள சுமார் 10200 Software Developerகள் Google இற்கு இந்த Apps களை வழங்குகின்றனர். இவற்றுல் சில் இலவசமாகவும். சில் பணம் செலுத்தியும் நமக்கு Download செய்துகொள்ள முடியும். இப்போதைக்கு உள்ள Apps களில் 67%வை இலவசமாகவே கிடைக்கின்றன.ஏனையவை சாதரன விலைகளில் (சுமார் 3$) கிடைக்கின்றன. இந்த Android Market மூலம் Apps விற்பனை செய்தல் Google இன் பிரதான வருமான வழிகளில் ஒன்றாகும். 2005 இல் Android Inc. ஐ 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கிய Google இன்று இதன் மூலம் மாத்திரம் பல பில்லியன்கள் இலாபமடைகின்றது.
Android – என்ட்ரொய்ட்
இந்த Android இயங்குதளம் பயன்படுத்தக் கூடிய கையடக்க சாதனங்களாக, ஸ்மார்ட் போன் அதாவது கணனி மூலம் செய்யக்கூடிய வேளைகளை செய்யும் திறனுள்ள கையடக்கத் தொலைபேசிகள், அல்லது டெப்லட் பீசி (Tablet PC) எனும் கையி எடுத்துச் செல்லக் கூடிய சிறிய ரக கணனிகள். இவற்றுக்கு மேலதிகமாக E-Readerகள், Note Book வகைகள் போன்றவற்றிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.
எத்தனையோ கையடக்கத் தொலைபேசிகளுக்கான இயங்கு தளங்கள் இருக்க அவற்றின் இடையே இந்த Android இயங்குதளம் மாத்திரம் ஏன் இந்த அளவு பிரபல்யம் ஆகியுள்ளது என கேட்டால் அதற்கு ஒன்றல்ல, ஏராலமான காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது Android இயங்குதளம் ஒரு பரிபூரன மொபைல் போன் இயங்குதளமாக இருப்பதாகும்.
Android Mobile OS ஆனது Linux இயங்கு கேர்னல் இன் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். எக்ஸ்.எம்.எல். (XML), சீ (C), ஜாவா (Java) மற்றும் C++ ஆகிய நிரலாக்க மொழிகள் மூலங்களால் இது நிறுவப் பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக இந்த Android Mobile OS ஐ ஒரு திறந்த மூலப் மென்பொருள் (Open Sauce) ஒன்றாக கூற முடியும். அதாவது Android OS ஐ வேண்டியோருக்கு இலவசமாக பெற்றுக் கொள்ள முடிவதோடு, தமக்கு வேண்டிய விதத்தில் மாற்றிப் பயன்படுத்திக் கொள்ள முடிவதாகும். என்றாலும் அது மூல நிறுவனத்தில் அனுமதியுடனே செய்யப்படல் வேண்டும். அதாவது, ஓபன் ஹேன்ட்செட் எலையன்ஸ் (Open Handset Alliance) நிறுவனத்தின் அனுமதியுடனே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
பின்னர் 2008 ஆம் ஆன்டின் செப்டம்பர் மாதம் 20ம் திகதி Android Mobile OS இன் முழுமையான பகுப்பு மூல நிரல் (Source Code) கூகில் நிறுவனத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த பகுப்பு மூல நிரல் (Source Code) களுக்கு ஏற்றவிதத்தில் துனை மென்பொருற்கள் அல்லது Apps நிர்மானத்திற்கு பக்க துனையாகும் விததில் ஆகும்.
இவ்வாரு நிர்மானிக்கப்படும் Apps பரிமாற்றிக்கொள்ள தேவையான இடத்தை Google ஏற்கெனவே நிர்மானித்திருந்தது, அதாவது Android Market எனும் தளம் இதற்கு இடமளிக்கிறது. நிர்மானிக்கப்படும் துனை மென்பொருட்களை இந்த Android Mark மூலம் பரிமாரிக்கொள்ள முடியும், விற்பனை செய்யவும் முடியும். எது எவ்வாறாயினும் அனைத்து Apps களும் Google இன் கண்கானிப்பிளேயே பரிமாறப்படும்.
