எவ்வளவுதான் நாம் Windows கணனிகளைப் பயன்படுத்தினாலும் அதனோடி இனைந்து வரும் Internet Explorer செயலியைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு மாற்றீடாக Chrom, Opera, Firefox போன்ற செயலிகளையே பயன்படுத்தி வந்தோம். Internet Explorer மக்களுக்கள் மத்தியில் உலாவரவைக்க மைக்ரோ சொஃப்ட் நிறுவனமும் படாத பாடு பட்டது. என்றாலும் Internet Explorer ஐ அனைவரும் பயன்படுத்தியது ஒரேயொரு காரனத்திற்காகவே. அது தான் Chrom, Opera, Firefox போன்ற ஏதாவது ஒரு Browser ஐ முதன் முதலில் கணனிக்கு Download செய்வதற்கு.
என்றாலும் முயற்சியைக் கைவிடாத மைக்ரோசொஃப்ட் நிறுவனம் 2015 இல அதன் Windows 10 இயங்குதளத்துடன் Internet Explorer இணைய உலாவிக்கு மாற்றீடாக Edge எனும் புதிய Browser ஐ அறிமுகப்படுத்தியது. Internet Explorer Interface இலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்த இந்த புதிய உலாவி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு எடுபட்டது எனலாம்.
பின்னர் காலப்போக்கில் பல புதிய அம்சங்களோடு ஏனைய Browser ஜாம்பவான்களோடு போடிபோடும் அளவுக்கு முன்னெறியுள்ளது. அதில் முக்கிய விடயம் இதில் உள்ள புதிய வசதிகளும் பாதுகப்பு அமைப்புகளுமாகும்.
டெக் ரீடர் தளத்தின The best web browsers for speed, privacy, and customization தரப்படுத்தலில் Edge இரண்டாம் இடத்தில் இருப்பதுவே இதற்கு போதிய சாட்சியாகும்.
இதுவரைகாலமும் Edge ஐ பயன்படுத்தாமல் இருந்த நான் சமீபத்தில் பயன்படுத்திப் பார்த்ததில், இப்போது ஏனைய அனைத்து Browser களையும் விட்டுவிட்டு Edge இற்கே மாறிவிட்டேன் என தோன்றுகிறது.
இன்றைய தினம் காலையிலேயே Edge Browser ஐ Open செய்தபோது தோன்றிய அதன் 2023 இன பயனத்தை குறிக்கும் சில கன் கவர் Slide கள் என்னைக் கவர்ந்திருந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.









