பணக் கொடுக்கல் வாங்களுக்கு தயாராகிறது X (எனும் Twitter)

Share or Print this:

X (எனும் Twitter) தளத்தை எலொன் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேரு பரீட்சாத்த முயற்சிகளையும் மாற்றங்களையும் செய்து வருகிறார். X தளத்தை “Everything App” ஆக மாற்றுவதை இலக்காகக் கொண்டே அவர் இயக்கி வருகிறார்.

அதன் ஒரங்கமாக தளத்தினூடாக பனப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாராகிவருகிறது. அதன் முதல் கட்டமாக கடந்த நவம்பர் மாதத்தில் அமேரிகாவின் பல மாநிலங்களில் அதற்கான அனுமதியையும் பெற்றது. அதனடிப்படையில் South Dakota, Kansas மற்றும் Wyoming மாநிலங்களில் உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

Arizona, Georgia, Iowa, Maryland, Michigan, Mississippi, Missouri, New Hampshire ம்ற்றும் Rhode Island மாநிலங்களில் எதிர்வரும் ஆண்டில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

இதற்கான அங்கீகாரம் X Payments LLC எனும் X இன் துணை நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *