எப்போதும் போட்டி போட்டுக்கொண்டு புதிய வசதிகளை வழங்கும் WhatsApp தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது.
நீண்ட காலமாக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வசதியே இந்த அம்சமாகும். ஒரு குழுமத்தில் குறித்த ஒரு செய்தியை Pin செய்யும் வசதியே இதுவாகும்.
இதன்மூலம் ஏதாவது முக்கிய செய்தி பகிரபட்டிருப்பினும் தொடர்ந்து வரும் செய்திகளால் அத்தகைய செய்திகள் தவற விடப்பட வாய்ப்புள்ளது. அதற்காக குறித்த செய்தியை Pin செய்து வைப்பதன் மூலம் குறித்த செய்தி Chat இன் மேல் பகுதியில் அனைத்து அங்கத்தவர்களுக்கும் காற்சியளிக்கும்.
Group Admin களுக்கு பயனுள்ள இந்த சேவை ஏற்கனவே Telegram செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததும் குற்றிபிடத்தக்கது.
