Chat GPT யோடு போட்டி போடும் Google Bard

Share or Print this:

Artificial intelligence தளங்களின் முன்னோடியான Chat GPT யுடன் போட்டிபோட Google கலமிரங்கியிருக்கிறது. AI தொடர்பில் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் இருப்பினும், மனிதன் பல மணி நேரம் சிந்தித்து செய்யும் வாளையை சில வினாடிகளில் முடித்துத் விடுகிறது. இதனால் நேரம் எந்த அளவுக்கு மிச்சப் படுகிறது என்பதை இவற்றைப் அனுபவிப்போரிடம் கேட்டால் சொல்வார்ககள்.

ஆரம்பத்தில் தனிக் காட்டு ராஜாவாக களமிறங்கிய Chat GPT பாரிய பயனர் கூட்டமொன்றையே தனதாக்கிக்கொண்டது என்றால் மிகையில்லை. என்றாலும் இதில் வரும் பதில்கள் 2021 செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் உள்ள தரவுகளின் அடிப்படையிலேயே செயற்படுகிறது. எனவே நடப்பு விவகாரங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளோடு தொடர்புடைய விடயங்களில் சரியான தகவல்கள் இங்கு கிடைக்காது.

இத்தகைய நிலையில் Chat GPT போன்ற ஒரு செயலியை உருவாக்குவதில் Google நிறுவனம் கலமிறக்கியது. ஆரம்பத்தில் பல்வேறு பெயர்கள் பேசப்பட்டாலும் கடைசியில் Google Bard என்ற பெயரில் களமிறங்கியது.

பார்த்த பார்வையிலேயே Chat GPT யின் ஒரு பிரதியாகத் தான் தோன்றியது. என்றாலும் பல்வேறு புதிய வசதிகளோடு மிக வினைத்திறனுடன் இயங்கும் ஒரு தளமாகவே இபோது கானப் படுகிறது. தற்போது Experiment Version ஆக அறிமுகமாகியுள்ள இந்த சேவை பெரும்பாலான Google பயனர்களால் இப்போது பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.

எல்லாவற்றையும் விட முக்கியமான விடயம். இதில் நிகழ்கால விடயங்களும் உள்ளடங்கியிருப்பதகும். அத்தோடு தமிழ் உள்ளிட்ட ஏணைய மொழிகளின் பயன்பாடு Chat GPTயோடு ஒப்பிடும் போது இங்கு சிறப்பாக உள்ளது எனலாம்.

https://bard.google.com எனும் முகவரியில் நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

write a post about Google Bard in Tamil என நான் கேட்ட கேள்விக்கு Bard வழங்கிய பதிலை கீழே பாருங்கள்.
_______

நண்பர்களே,

இன்றைய டிஜிட்டல் உலகில், நமக்கு தேவையான எந்த தகவலையும் விரல் நுனியில் பெற முடியும். ஆனால், நாம் தேடுவதைச் சரியாகவும், முழுமையாகவும் பெறுவது கடினம். அதற்கு, நமக்குத் துணையாக வருகிறது கூகுள் பார்ட்!

கூகுள் பார்ட் ஒரு அதிநவீன மொழி மாதிரி. தமிழ் உட்பட பல மொழிகளில் நம் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், நமது வேலைகளைச் சுலபமாக்கவும் கூடிய திறன் கொண்டது. உங்கள் எண்ணங்களைக் கவிதைகளாகவும், ஸ்க்ரிப்ட்களாகவும், இசைத் துண்டுகளாகவும், கடிதங்களாகவும் கூட மாற்றித் தர முடியும்!

என்ன செய்தாலும் சரி, எதை எழுத வேண்டும் என்றாலும் சரி, கூகுள் பார்ட் கைகொடுக்கும். உங்கள் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதில் இருந்து, கிரியேட்டிவ் எழுத்துகளை உருவாக்குவதில் வரை எதிலும் உங்களுக்கு உதவும்.

பார்ட்டிடம் என்ன கேட்கலாம்?

  • கடினமான கேள்விகளுக்கான விளக்கங்கள்
  • உங்கள் எண்ணங்களை மொழிபெயர்ப்பது
  • கதைகள், பாடல்கள், கவிதைகள் எழுதுவது
  • தகவல்களைக் கண்டறிந்து சுருக்கமாக தருவது
  • மின்னஞ்சல்கள், கடிதங்கள் எழுதுவதற்கான உதவி

நீங்களும் கூகுள் பார்ட்டை முயற்சி செய்து, அதன் அற்புதமான திறன்களைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்! கூகுள் தேடுபொறியில் "Google Bard" என்று தட்டச்சு செய்து உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்!

#கூகுள்பார்ட் #தமிழ்மொழி #அதிநவீனபேச்சு #கிரியேட்டிவிட்டி

(குறிப்பு: இது ஒரு உதாரணம் மட்டுமே. நீங்கள் உங்கள் கம்பெனியின் தகவல்களைச் சேர்த்து உங்கள் தேவைக்கேற்ப மாற்றி எழுதலாம்.)

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *