Cross Border Payment Symposium: இலங்கையின் முதலாவது கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தியது LankaPay!

Share or Print this:

இலங்கையின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay, நாட்டின் முதலாவது எல்லை தாண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான கருத்தரங்கை (Cross Border Payment Symposium) 2025 மார்ச் 27 அன்று சினமன் கிராண்ட் கொழும்பு ஹோட்டலின் அட்ரியம் லொபியில் வெற்றிகரமாக நடத்தியது. இலங்கை உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) மற்றும் ஏனைய சுற்றுலாத் துறை அமைப்புக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கிய நிகழ்வு, நிதித் துறை தலைவர்கள், சுற்றுலா பங்குதாரர்கள் மற்றும் பிராந்திய கொடுப்பனவு வலையமைப்பு பிரதிநிதிகள் எனப் பல முக்கியஸ்தர்களை ஒன்றிணைத்தது.

இலங்கையின் எல்லை தாண்டிய கொடுப்பனவு தீர்வுகளின் முன்னேற்றங்கள் மற்றும் சுற்றுலா மற்றும் நிதித் துறைகளில் அவற்றின் புரட்சிகரமான தாக்கம் குறித்து இந்தக் கருத்தரங்கில் ஆழ்ந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சுற்றுலா முகாமைத்துவ நிறுவனங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் முக்கிய முடிவெடுப்பவர்கள், LankaPay இன் உலகளாவிய பங்குதாரர் வலையமைப்புகளின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டின் நம்பகமான கொடுப்பனவு உள்கட்டமைப்பு வழங்குநராக, LankaPay டிஜிட்டல் கொடுப்பனவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடங்கியதில் இருந்து, LankaPay ஆனது முக்கிய சர்வதேச கொடுப்பனவு வலையமைப்புகளுடன் மூலோபாய கூட்டாண்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் UPI கொடுப்பனவுகளுக்கான NPCI International Payment Limited (NIPL), எல்லை தாண்டிய QR கொடுப்பனவுகளுக்கான Alipay+ மற்றும் WeChat Pay, எல்லை தாண்டிய ATM மற்றும் QR கொடுப்பனவுகளுக்கான UnionPay International, எல்லை தாண்டிய ATM மற்றும் அட்டை கொடுப்பனவுகளுக்கான JCB International Japan, “pay as a local” முன்முயற்சியின் கீழ் QR கொடுப்பனவுகளுக்கான Mastercard, அத்துடன் இலங்கையில் எல்லை தாண்டிய ATM ஏற்புக்கான Discover Financial Services ஆகியவை அடங்கும். இந்த ஒத்துழைப்புகள் சர்வதேச பார்வையாளர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான கொடுப்பனவு அனுபவத்தை உறுதிப்படுத்துவதுடன், உள்ளூர் வணிகங்களுக்கான பரிவர்த்தனை செலவுகளையும் குறைக்கின்றன.

இந்தக் கருத்தரங்கில், பல தொழில்துறை நிபுணர்கள் உலகளாவிய கொடுப்பனவு போக்குகள் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பங்கு குறித்த தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். Ant International (Alipay+) இன் தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கான பொது முகாமையாளர் மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மைகளின் பொது முகாமையாளர் திரு. எட்வர்ட் யூ; Discover Financial Services இன் ஆசிய பசுபிக் பிராந்திய துணைத் தலைவர் திருமதி. சன்யா பனிக்கர்; இலங்கையில் JCB International இன் ஆலோசகர் திரு. லக்ஷ்மன் லியனகே; இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான Mastercard இன் சில்லறை மற்றும் வர்த்தக முகாமையாளர் திரு. தனுஷ்க தெனபது; NPCI International Payments Ltd. இன் ஆசிய பசுபிக் தலைவர் திருமதி. சோனல் அஸ்னானி; UnionPay International இன் தெற்காசிய தலைவர் திரு. பிங்ஹான் ஹு; மற்றும் Tencent இன் Weixin Pay தென்கிழக்கு ஆசியாவின் புத்தாக்க மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளின் தலைவர் திரு. காரி வோங் ஆகியோர் விளக்கமளித்தனர். அவர்களது விளக்கக்காட்சிகள், தடையற்ற எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் எவ்வாறு இலங்கையின் சுற்றுலா மற்றும் நிதி நிலப்பரப்பை மாற்றியமைக்க முடியும் என்பது குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கின.

பிராந்தியத்தின் சிறந்த நடைமுறைகள் மற்றும் தடையற்ற கொடுப்பனவு தீர்வுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து தொழில்துறை நிபுணர்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்ட ஒரு சுவாரசியமான குழு விவாதம் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. ஒரு டிஜிட்டல் ரீதியாக மேம்பட்ட பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் இலங்கையின் நிதிச் சூழலை வலுப்படுத்துவதற்கும் LankaPay இன் அர்ப்பணிப்பை இந்தக் கருத்தரங்கு அடிக்கோடிட்டுக் காட்டியது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *