PayHere இலங்கையின் புதிய இணைய கொடுப்பனவு முறைமை (Payment gateway)

Share or Print this:

தொழிநுட்ப பாவனையிலும் இணையப் பாவனையிலும் இலங்கை நாளுக்கு நாள் முன்னேரி வருகின்றது என்றால் மிகையில்லை என நினைக்கிறேன். வலர்ச்சியடைந்து வரும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தகவல் தொழிநுட்ப துறையின் வளர்ச்சி வேகம் வரவேற்கத்தக்க வேகத்தில் உள்ளது எனலாம்.

அதே போல இணையவழியான கொடுக்கல் வாங்கல்களும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றது, ebay.com போன்ற சந்வதேச இணைய சந்தைத் தளங்கள் வழங்கக்கூடிய அளவு சேவையை வழங்கத்தக்க ஏராலமான இலங்கையின் இணையத்தளங்களும் உள்ளன.

இருந்த போதிலும் இவற்றில் பெரும்பாலான தளங்களில் கொடுப்பனவு தொடர்பான (Payment) அசௌகரியங்கள் கானப்பட்டன, பல தளங்கள் Visa அல்லது Master போன்ற குறிப்பிட்ட ஒன்றோ அல்லது இரண்டு கொடுப்பனவு முறைகளையே தமது தளங்களில் ஏற்ற்றுக்கொண்டன. சில தளங்கள் மட்டுமே இவற்றுக்கு விதிவிளக்கக இருந்தன. இதற்கு முறையான ஒரு இணைய கொடுப்பனவு முறைமை (Payment Gateway) கானப்படாமையே காரனமாகும். அதே போல, இருக்கக்கூடிய இணைய கொடுப்பனவு முறைகளும் (Payment Gateway) பல்வேறு குறைகளுடன் கானப்பட்டன.

இந்த அனைத்து குறைகளையும் அடைக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் உத்தியோகபூர்வமாக வெளியான PayHere சேவை, அழகிய முகப்புடனும் யாருக்கும் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளது. அனைத்து வைக Credit Card, Debit Card, Bank Transfer இவற்றுக்கு மேலதிகமாக Mobile Valet சேவைகளான eZ Cash, M Cash என்பவற்றோடு  Mobile Transfer போன்ற ஏராலமான வசதிகளை உள்ளடக்கி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் வியாபாரப் பதிவுச் சான்றிதழை கொண்டு உங்கள் வியாபாரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் இதன்  இலவச கணத் திறந்துகொள்ள முடியும். பணப் பரிமாற்றத்தின் போது சிறு தொகையொன்றை சேவைக்கட்டனமாக இந்த சேவை அறவிடுகின்றது.

இலங்கையின் இணையச் சந்தையின் வளர்ச்சியில் இந்த சேவை பாரிய ஒரு பங்களிப்பை செலுத்தும் என எதிர்க்கப்படுகிறது. இது போன்ற இன்னும் பல சேவைகள் உருவாவதற்கும் இது வித்திடும் என எதிர்பார்க்கலாம்.

காத்கிருப்போம்…

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *