இந்தியாவின் முன்னணி online கொடுக்கல் வாங்கள் முறைமையான UPI நாளை முதல் இலங்கையிலும் அதன் சேவையை ஆரம்பிக்கவுள்ளதகா இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இலங்கை மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தபட்டு பெரும்பாலான செயலிகளில் பயன்படுத்தபட்டுவரும் Lanka QR முறைமையுட கூட்டிணைந்த சேவையாகவே இச் சேவை அறிமுகமாகவுள்ளது.
PUI யானது Reserve Bank of India (RBI) மற்றும் Indian Banks’ Association (IBA) ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்தியாவின் Online கொடுக்கல் வாங்கள்களை ஒழுங்கமைப்பதற்காக உருவாக்கப்பட்ட National Payments Corporation of India (NPCI) இனால் வழங்கப்படும் ஒரு சேவையாகும். இந்த NPCI யின் கீழ் UPI இற்கு மேலதிகமாக RuPay, IMPS, NACH, APBS, AePS, NFS என வெவ் வேறு கொடுக்கல் வாங்கள் சேவைகளை வழங்கும் 10 இற்கும் மேற்பட்ட சேவைகள் உள்ளடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நவீன முயற்சிகள் வரவேற்கத்தக்காத இருந்தாலும் உள்நாட்டில் உருவாகப்பட்டு மிகச் சிறப்பாக செயற்பட்டுவரும் Hela Pay போன்ற சேவைகள் ஏற்கனவே இருக்கும் போது இத்தகைய வெளிநாட்டு நிதிச் சேவைகளுக்கு இடமளிப்பது எந்த அளவுக்கு பொருத்தமானதா இருக்கும் எம்பது கேள்வியே…
