Ctrl + Alt + Delete செயற்பாடு தவறுதலாக உருவாக்கப்பட்டது : பில் கேட்ஸ்

Share or Print this:

மைக்ரோசொப்ட் இயங்குதளங்களிலுள்ள பிரபல்யமான Ctrl + Alt + Delete செயற்பாடு தவறுவதலாக உருவானது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் இயங்குதளங்களின் கணனியை ஷட் டௌவ்ன் செய்வதற்கும் கணனியின் செயற்பாடுகளை முடக்கும் செயற்பாடுகளுக்கும் பிரதானமாக இந்த Ctrl + Alt + Delete செயற்பாடு பயன்படுகிறது.

இது குறித்து செல்வந்தரான பில்கேட்ஸ்  கூறுகையில், 3 விரல்களை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் செயற்பாட்டினை ஒரு பொத்தானில் வடிவமைக்க இருந்தோம். ஆனால் ஐ.பி.எம். விசைப்பலகையை (கீ போட்) உருவாக்கிய நபர் இந்த ஒரு பொத்தான் விடயத்தினை எங்களுக்காக செய்யவில்லை. எனவே Ctrl + Alt + Delete செயற்பாட்டினை வடிவமைத்தோம்  என தெரிவித்துள்ளார்.

இத்தவறு குறித்த தகவலை அண்மையில் ஹாவாட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செவ்வி ஒன்றின் போதே பில்கேட்ஸ் வெளியிட்டுள்ளார்..

குறித்த ஐ.பி.எம். விசைப்பலகையினை டேவிட் பிராட்லி என்பவரே உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *