Zoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக பேஸ்புக் Messenger Room

Share or Print this:

இன்றைய இந்த கால சூழ்நிலையில் பல்வேறு துறைகளில் வீடியோ கொன்பரன்ஸ் செய்வதற்காக Zoom அப்பிளிக்கேஷன் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
இந்த அப்பிளிக்கேஷனில் உள்ள ஆபத்துக்கள் கோக்லெ மற்றும் மைக்ரோசொஃப்ட் போன்ற பலவேறு தரப்பினராலும் எடுத்துக் காட்டப்பட்டாலும் பயன்படுத்துவோர் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். எனினும் சில நாடுகள் குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் Zoom அப்பிளிக்கேஷனுக்கு போட்டியாக புதிய வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்வதற்கு பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகின்றன. இப்படியிருக்கையில் பேஸ்புக் நிறுவனம் Messenger Room எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் 50 நபர்கள் வரை ஒரு நேரத்தில் வீடியோ அழைப்பில் ஒன்றாக இணைய முடியும்.

இந்த வசதியானது கடந்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர் பேர்க் கடந்த வாரம் கருத்து வெளியிட்டிருந்தார்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *