WhatsApp Account திடீரென ‘Under Review’ என வருகிறதா? Meta நிறுவனம் கூறும் விளக்கம் இதோ!

Share or Print this:

நம்மில் பலருக்கு காலையில் எழும்பியதும் WhatsApp ஐ check பண்ணுவது தான் முதல் வேலையாக இருக்கும். ஆனால், கடந்த சில மணி நேரங்களாக உலகெங்கிலும் உள்ள பல WhatsApp பாவனையாளர்களின் (Users) கணக்குகள் திடீரென முடக்கப்பட்டு, ‘Under Review’ என்ற நிலைமைக்கு மாறியிருப்பதை சமூக வலைத்தளங்களில் பரவலாகக் காண முடிகிறது.

இலங்கையிலும் கூட சிலருக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். உங்களுடைய WhatsApp ஐ open பண்ணும் போது இப்படி ஒரு warning message வந்திருந்தால், நீங்கள் உடனடியாகப் பயப்படத் தேவையில்லை. இது தொடர்பில் தற்போது வெளிவந்துள்ள தகவல்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

சரியாக என்ன நடக்கிறது?

பாதிக்கப்பட்ட WhatsApp கணக்கிற்குள் நுழைய முயற்சிக்கும் போது, “சேவை விதிமுறைகள் (Terms of Service) மீறப்பட்டுள்ளதா எனப் பரிசீலிக்க, உங்கள் கணக்கின் செயற்பாடுகளும் device தகவல்களும் review செய்யப்படுகிறது” என்ற ஒரு message screen இல் தோன்றுகிறது.

சாதாரணமாக, எந்தவொரு காரணமுமின்றி திடீரென இவ்வாறு account முடக்கப்படுவது பாவனையாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இந்த review process முழுமையாக முடிவடைய சுமார் 24 மணித்தியாலங்கள் வரை எடுக்கலாம் என WhatsApp தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Meta நிறுவனத்தின் பதில் என்ன?

இந்த திடீர் account suspensions குறித்து Meta நிறுவனம் TechCrunch தளத்திற்கு ஒரு விளக்கத்தை வழங்கியிருக்கிறது.

  • தொழில்நுட்பக் கோளாறு (Technical Glitch): WhatsApp சேவையை தவறாக பயன்படுத்துபவர்களிடம் (Abusers) இருந்து platform ஐப் பாதுகாப்பதற்காக Security system இல் அவர்கள் எடுத்த சில நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பப் பிழை (Bug) காரணமாகவே இந்தச் சிக்கல் உருவாகியுள்ளது.
  • மீட்பு நடவடிக்கைகள்: இந்த கோளாறால் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட accounts களை மீண்டும் வழமை நிலைக்குக் (Restore) கொண்டுவர Meta நிறுவனம் தற்போது தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த glitch ஏற்படுவதற்கான மிகத் துல்லியமான காரணம் என்னவென்றோ, அல்லது எந்தெந்த புவியியல் வலயங்களில் (Geographic regions) உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றோ Meta நிறுவனம் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

Automated Security Systems இன் அபாயம்

உலகளவில் மாதாந்தம் 3 பில்லியனுக்கும் (3 Billion) அதிகமான Active users ஐக் கொண்டு இயங்கும் WhatsApp போன்ற ஒரு பிரம்மாண்டமான App இல், மிகச் சிறியதொரு technical error ஏற்பட்டாலும் அது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களைப் பாதிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

அத்துடன், முழுமையாக AI மற்றும் Automated Security Systems களை நம்பியிருக்கும் போது, எந்தவொரு தவறும் செய்யாத அப்பாவிப் பாவனையாளர்களின் கணக்குகள் கூடத் தவறாக முடக்கப்படும் (False positives) அபாயம் (Risk) எதிர்காலத்தில் தாராளமாகவே இருக்கிறது என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது.

முடிவாக: உங்கள் WhatsApp கணக்கும் தற்போது ‘Under review’ இல் இருந்தால், எந்தவொரு Third-party WhatsApp version களையும் (GB WhatsApp போன்றவை) install செய்ய முயற்சிக்க வேண்டாம். உத்தியோகபூர்வ App இலேயே 24 மணித்தியாலங்கள் பொறுமையாகக் காத்திருங்கள்; உங்கள் account தானாகவே வழமை நிலைக்குத் திரும்பும்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *