இணையதளத்தில் உலாவுவோர் அதிகம் பயன்படுத்தும் டோரண்ட் இணையதளம் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளது.
சமீபத்தில் Kickass Torrents எனும் உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளம் அமெரிக்க புலனாய்வு அமைப்பால் முடக்கப்பட்டது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அதன் உரிமையாளர் ஆர்டம் வாலின் என்பவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேடுதல் இணையதளமான டோரண்ட் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டு உள்ளது.
கிக்காஸ் டோரண்ட் (Kickass Torrents) இணையதளம் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்தது, இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் போலந்தில் கைது செய்யப்பட்டார். அதிகம்பேர் பார்க்கும் இணையதளங்களில் கிக்காஸ் இணையதளம் 69-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போதாமைக்கு இப்போது Torrentz.eu தளமும் தனது சேவையை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஒவ்வொரு வெப்சைட்டாக டோரண்ட்களைத் தேடிச் செல்ல கஷ்டப்படும் யூசர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெட்டா-சர்ச் என்ஜின் Torrentz.eu. குறிப்பிட்ட டோரண்டை தேடும்போது இணையத்தில் கிடக்கும் எண்ணற்ற தகவல்கள் அனைத்தையும் கொண்டுவந்து திரையில் கொட்டாமல், நம்பகத்தன்மையான டோரண்ட்களை மட்டும் தனியாக பிரித்து யூசர்களுக்குக் கொடுக்கும் வேலையை, 2003இல் தொடங்கி, கடந்த 13 வருடங்களாக செய்துவந்த Torrentz.eu தற்போது விடை பெற்றுவிட்டது.
KickAssTorrents இழுத்து மூடப்பட்டபிறகு பைரேட் டவுன்லோடர்களுக்கு புகலிடமாகத் திகழும் thepiratesbay.se மற்றும் RaRbg.be ஆகிய டோரண்ட் இணையதளங்களும்கூட அவ்வப்போது இணையதளத்தை மூடி விடுகின்றனர்.
இந்த டொரண்ட் வேட்டை யாரை பாத்ததோ இல்லையோ நம்மைப்போன்ற இலவசங்களை எதிர்பார்த்திருக்கும் ஆயிரக்கணக்கானோரை ரொம்பவே பாதித்துள்ளது என்பது மட்டும் உன்மை. இவற்றுக்கும் இன்னுமொரு மாற்றுத் தீர்வொன்று வருமா என காத்திருப்போம்.
