உங்களின் சொந்த AI Agent-ஐ மொபைலில் கட்டுப்படுத்த OpenClaw App வெளியீடு!

Share or Print this:

நம்மில் பல பேருக்கு AI (Artificial Intelligence) கருவிகளைப் பயன்படுத்துவது இப்போது அன்றாடப் பழக்கமாகிவிட்டது. அந்த வகையில், சமீபகாலமாக Tech உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு Open Source AI Agent தான் “OpenClaw”. இதுவரை காலமும் இந்த OpenClaw மென்பொருளை நமது கணனியில் (Mac, Windows அல்லது Linux) நிறுவிவிட்டு, WhatsApp அல்லது Telegram ஊடாகவே கட்டளைகளை வழங்கி வந்தோம். ஆனால் இப்போது, பாவனையாளர்களின் வசதிக்காக OpenClaw-இன் அதிகாரபூர்வ Mobile Application கள் Android மற்றும் iOS இயங்குதளங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

இதனால், இனி இலங்கையில் உள்ள Tech ஆர்வலர்கள் தமது Smart கைபேசிகளிலிருந்தே நேரடியாகத் தமது சொந்த AI Agent-ஐ மிக இலகுவாகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

OpenClaw Mobile App எப்படி வேலை செய்கிறது?

இந்த App-ஐ நீங்கள் உங்கள் Mobile Phone-இல் Install செய்தவுடன், இது வழமையான AI App கள் போன்று நேரடியாக Cloud-இல் இயங்காது. மாறாக, உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள கணனியில் ஓடிக்கொண்டிருக்கும் OpenClaw Gateway உடன் இணைக்கப்படும். QR code அல்லது Setup code ஊடாக இதனை மிக இலகுவாக Pair செய்துகொள்ள முடியும். இதனுடைய மிகப்பெரிய நன்மையே, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (Data) மற்றும் ஆவணங்கள் முற்றிலும் பாதுகாப்பாக உங்களின் சொந்தக் கணனியிலேயே தங்கியிருக்கும் என்பதுதான்.

இந்த App மூலம் கிடைக்கும் பிரதான வசதிகள்:

  • Chat & Real-time Talk Mode: உங்கள் AI Assistant உடன் நேரடியாக Chat செய்ய முடிவதோடு, Voice மூலமாகவும் பேசிக்கொள்ள முடியும்.
  • Action Approvals: உங்கள் கணனியில் உள்ள AI ஏதேனும் முக்கிய வேலைகளைச் செய்யும் போது (உதாரணமாக ஒரு Email-ஐ அனுப்புதல் அல்லது File-களை மாற்றுதல்), உங்கள் கைபேசிக்கு Notification வரும். அதனை நீங்கள் Phone ஊடாகவே Approve செய்யலாம்.
  • Device Access: நீங்கள் அனுமதி வழங்கும் பட்சத்தில், உங்கள் Mobile-இன் Camera, Location மற்றும் Contacts போன்றவற்றை OpenClaw பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் ஆரம்பக்கட்டக் கருத்துக்கள் எப்படி உள்ளன?

இந்த App தொழில்நுட்ப ரீதியில் அசாத்தியமான வேலைகளைச் செய்தாலும், இதன் User Interface (UI) சற்று சுமாராகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Android பதிப்பு மிகவும் அடிப்படையான (Bare-bones) வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், சில Bug-களும் இருப்பதாக ஆரம்பக்கட்டப் பயனர்கள் விமர்சித்துள்ளனர். iOS பதிப்பு ஓரளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்படிப் பார்த்தாலும், UI-இன் அழகை விட அது செய்யக்கூடிய வேலைகளின் வல்லமைக்காகவே பலரும் இதனை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

எமது அன்றாட வேலைகளைச் சுலபமாக்கிக்கொள்ளவும், ஒரு தனிப்பட்ட Assistant போலச் செயல்படவும் இந்த OpenClaw மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்களும் ஒருமுறை இதனைத் தரவிறக்கம் செய்து பரிசோதித்துப் பார்க்கலாம்!

இந்த OpenClaw மென்பொருளை எவ்வாறு ஆரம்பத்தில் உங்கள் கணனியில் நிறுவிப் பயன்படுத்துவது என்பது பற்றி படிமுறையாகத் தெரிந்துகொள்ள OpenClaw மென்பொருள் அறிமுக வழிகாட்டி உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *