Ai பங்காளி : Copilot

Share or Print this:

Chat GPT, Google Bard என ஆளுக்கு ஆள் Ai சேவைகளை போட்டிபோட்டுக்கொண்டு வழங்கும் போது, Chat GPT யோடு கைகோர்த்துக்கொண்டு Microsoft நிறுவனம் அதன் புதிய இணைய உலாவியான Edge இன் இணை அங்கமாக Bing Chat எனும் Ai செயலியை அறிமுகம் செய்தது. இதனால் Edge உலாவி ஓரளவு பயனர்களால் திரும்பிப் பார்க்கப்பட்டது என்றாலும் தப்பில்லை.

காலத்திற்குக் காளம் கொஞ்சம் கொஞ்சமாக புதிய வசதிகளை உள்வாங்கிக்கொடே முன்னேறிய Bing Chat இப்போது Copilot எனும் புதுப் பெயரில் தனித்துவமாக இயங்குகிறது. மேலும் Edge உலாவிக்கு ஒரு தனிப் பலத்தையே வழங்கு வருகிறது என்றால் தப்பில்லை.

Edge உலாவியோடு மாத்திரமல்லாமல் Copilot (microsoft.com) இனையத்தளத்தினூடாகவும், மொபைல் செயலியூடாகவும் தனது பயன்பாட்டை விஸ்தரித்துள்ளது. Chat GPT உடன் இனைந்து செய்ற்படும் Copilot சேவை Chat GPT இல் கட்டனம் செலுத்திப் பயன்படுத்த வேண்டிய Chat GPT4 சேவையை இலவசமாக வழங்குகிறது.

அதாவது, Ai புகைப்படங்களை உருவாக்குதல், படங்களூடாக பதில் வழங்குதல், ஃபைல் களை வாசித்தல், அதிலிருந்து பதில்களை வழங்குதல் என Chat GPT இல் கட்டணம் செலுத்திப் பெற வேண்டிய சேவைகளை Copilot இலவசமாக வழங்குகிறது. என்றாலும் ஒரு சிறு கட்டுப்பாடு உள்ளது. இரு நாளைக்கு 30 Prompt கள் என ஒரு கட்டுப்பாட்டை வைத்துள்ளது. ஆனாலும், இப்போதைக்கு இது போதுமானதே.

நீங்களும் உங்கள் Ai யுடனான பயனத்தில் Copilot ஐயும் முயற்சித்துப் பாருங்கள். பார்த்து விட்டு எமக்கும் சொல்லுங்கள்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *