நம்மில் பல பேருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் ஆங்கிலத்தில் முறையாக எழுதுவது அல்லது தட்டச்சு செய்வது. ஏனெனில் நாம் தப்பாக எழுதிவிடுவோமோ, இலக்கனப் பிழைகளை விட்டு விடுவோமோ ஏன ஆயிரம் சந்தேகங்கள் நமக்குத் தோன்றும்.
இவற்றுக்கான விடை தான் இந்த QuillBot Ai, உங்களுக்கு முடியுமான விதத்தில் தேவையான விடயத்தை எழுதி விட்டு QuillBot இல் Paste விட்டால் போதும். Ai தொழிநுட்பத்தின் உதவியோடு அதனைத் திருத்தம் செய்து சரியான முறையில் உங்களுக்குத் தந்துவிடும்.
அதைவிட சிறந்த விடயம் இதனை அனைவராலும் இலவசமாகப் பயன்படுத்த முடியும். இலவச பதிப்பில் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும். அது சாதாரனமான பயன்பாட்டிற்கு போதுமானதே. உங்களுக்கு அனைத்து வசதிகளும் தேவையென்றால் அதன் Paid வேர்ஷன் ஐ Subscribe செய்துகொள்ள முடியும்.
அத்தோடு, ஆங்கிலம் மட்டுமல்லாது, பிரெஞ்ச், ரஷியன், ஹிந்தி உள்ளிட்ட 23 மொழிகளுக்கு இதனைப் பயன்படுத்த முடியும் என்பது மேலதிக தகவல்.
https://quillbot.com தளத்திற்கு சென்று நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.
