டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது

Share or Print this:

பிரபல் செட் செயலியான டெலிகிரம் இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் சனிக்கிழமை மாலை பிரான்சின் போர்ஜெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சு தொலைக்காட்சி நெட்வொர்க் டி. எஃப் 1 தெரிவித்துள்ளது.

பாரிய குற்ரச்செயல்களுக்கு டெலிகிராம் செயலி ஊடாக எவ்வித கட்டுப்படுகளுமின்றி இடமளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் சிறுவர் கடத்தல்கள், துஷ்பிரயோகம் உள்ளிட்ட பாரியளவிலான குற்றங்களுக்குக் கூட டெலிகிராமில் குற்றவளிகளால் பயன்படுத்தப்டுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்பாடுகளை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை, மற்றும் அரச கோரிக்கையை கனக்கிலெடுக்கமை போன்ற காரனங்களாளே துரோவ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டுரோவின் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அதே வேளை ரஷ்யாவை பிறப்பிடமாகக் கொண்ட டுரோவ் அரசியல் காரனங்களுக்காக 2014 முதல் துபாயில் வசித்து வருகிறார். டெலிகிராம் தற்போது 950 மில்லியன் பயனர்களை உள்வாங்கியுள்ளதோடு, டெலிகிராம் செயலி வெரும் 30 பொறியியலாளர்களை கொண்டு மட்டுமே இயங்கிவருகின்றது. இவை டுரோவ் மற்றும் டெலிகிராம் பற்றிய சில மேலதிக தகவல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *