WhatsApp-இல் அறிமுகமாகியுள்ள புதிய Username வசதி: முந்திக்கொள்வது எப்படி?

Share or Print this:

WhatsApp பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்! நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த WhatsApp Username வசதியை Meta நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், இனிமேல் புதிய நபர்களுடனோ அல்லது Business கணக்குகளுடனோ Chat செய்யும் போது, உங்கள் Phone Number-ஐப் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.

தற்போதைக்கு, இந்த வசதி முழுமையாக அனைவருக்கும் வழங்கப்படாவிட்டாலும், “Username Reservation” (முன்பதிவு) செய்யும் வசதியை Android மற்றும் iOS Devices-களுக்கு WhatsApp படிப்படியாக வழங்கி வருகிறது.

எப்படி Reserve செய்வது? உங்களது WhatsApp App-ஐ Update செய்த பின்னர், Settings > Account > Username என்ற பகுதிக்குச் சென்று உங்களுக்கு விருப்பமான Username-ஐ நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பல பில்லியன் பயனர்கள் இருப்பதால், நீங்கள் விரும்பும் பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே Reserve செய்வது சிறந்தது.

இதில் நான் அவதானித்த ஒரு சுவாரஸ்யமான விடயம்! நீங்கள் சாதாரணமாகச் சென்று உங்களது Instagram Username-ஐ WhatsApp-இலும் Username ஆகப் பெற முயற்சித்தால், அநேகமாக அதனைப் பெற முடியாது. ஆனால், நீங்கள் உங்களது WhatsApp கணக்குடன் Instagram கணக்கை (Accounts Center ஊடாக) Link செய்திருந்தால் மாத்திரம், அதே பெயரை நீங்கள் WhatsApp-இலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதாவது, Meta நிறுவனம் Instagram பயனர்களுக்காக அவர்களின் தற்போதைய Username-ஐ WhatsApp-இலும் பாதுகாத்து வைத்துள்ளது. இதற்கு முன்னர் Threads App அறிமுகம் செய்யப்பட்ட போது, எப்படி எமது Instagram Username-ஐ அப்படியே பயன்படுத்த முடிந்ததோ, அதேபோலத் தான் இதுவும்.

இதனை வைத்துப் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது; Meta நிறுவனம் தங்களது அனைத்து தளங்களையும் (Facebook, Instagram, WhatsApp, Threads) ஒரே ID-இன் கீழ் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவதாகவே தோன்றுகிறது.

எனவே, நீங்கள் விரும்பும் Username-ஐ வேறு யாரும் Claim பண்ணுவதற்கு முன், விரைவாக உங்களது WhatsApp-இற்குச் சென்று அதனை Reserve செய்து கொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *