நாளுக்கு நாள் Technology வளர்ந்துட்டே போகுது. முந்தியெல்லாம் ஒரு சின்ன Software அல்லது Website உருவாக்கணும்னா, screen-ஐ பார்த்து மணிக்கணக்கா உக்காந்து Code அடிக்கணும். ஆனா, இப்ப AI வந்த பிறகு எல்லாம் மாறிட்டுது. அந்த வகையில இப்ப Tech உலகத்துல ரொம்பவே Trend ஆகிட்டு இருக்கிற ஒரு புது விசயம்தான் இந்த “Vibe Coding”.
Vibe Coding அப்படின்னா என்ன?
சுருக்கமா சொல்லப்போனா, நீங்க எந்த Programming Language-ம் (Syntax) முழுசா தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்ல. உங்களுக்கு என்ன வேணும், உங்களோட App அல்லது Website எப்படி வேலை செய்யணும்னு சாதாரணமா ஒரு வரியிலயோ அல்லது பந்தியிலயோ Type பண்ணினா போதும், AI உங்களுக்காக முழு Code-ஐயும் எழுதி குடுத்துடும்.
இதுல “Vibe” அப்படிங்கறது, நீங்க குடுக்குற ஐடியா அல்லது feeling. உதாரணமா, “எனக்கு ஒரு Dark theme-ல, ஈஸியா use பண்ணக்கூடிய ஒரு Calculator app வேணும். அதுல பழைய calculations எல்லாம் Save ஆகுற மாதிரி ஒரு option இருக்கணும்” அப்படின்னு நீங்க Prompt மூலமா குடுக்குற அந்த “விளக்கம்” தான் இங்க Vibe. நாங்க குடுக்குற Vibe-ஐ புரிஞ்சுகிட்டு, அதுக்கேத்த மாதிரி Code-ஐ AI generate பண்ணி தரும்.
இது எப்படி வேலை செய்யுது?
நீங்க ஒரு சாதாரண மனிதர்ட்ட உங்களோட ஐடியாவை சொல்ற மாதிரி AI-கிட்ட சொல்லணும். Cursor AI, GitHub Copilot, ChatGPT, மற்றும் Gemini (Gemini-ல இதற்கென விசேடமாக Vibe Code வசதி இருக்கு) மாதிரியான Tools இத ரொம்பவே ஈஸியாக்கி இருக்கு. நாங்க இலங்கையில இருந்துட்டு, பெரிய பெரிய Ideas வச்சிருந்தாலும், Code பண்ண தெரியலையேன்னு கவலைப்பட தேவையில்லை. உங்களோட Logic சரியா இருந்தா போதும், மிச்சத்த AI பார்த்துக்கொள்ளும்.
இதனால என்ன நன்மைகள்?
- Time Saving: மணிக்கணக்கா, சில சமயம் நாட்கணக்கா Code அடிக்கிற Time இதுல மிச்சம். ஒரு சின்ன Prototype-ஐ சில நிமிடங்களிலயே Build பண்ணிடலாம்.
- Beginner Friendly: Coding-ஏ தெரியாதவங்க கூட தங்களோட Ideas-ஐ Reality-க்கு கொண்டுவரலாம். ஆரம்ப நிலையில இருக்கிறவங்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம்.
- Focus on Logic: எங்கயாவது ஒரு செமிகோலன் (;) விடுபட்டுப்போச்சா, இல்ல Syntax பிழையான்னு தேடி அலையாம, உங்களோட App-ஓட Logic-ல மட்டும் நீங்க முழுமையா Focus பண்ணலாம்.
முடிவுரை
இனிமேல் “நான் ஒரு Developer இல்லையே, எனக்கு Code அடிக்க தெரியாதே” அப்படின்ற கவலை யாருக்கும் தேவையில்லை. உங்ககிட்ட நல்ல Ideas இருக்கா? அதை சரியா AI-க்கு Explain பண்ண தெரியுமா? அப்ப நீங்களும் ஒரு Developer தான்! Vibe Coding மூலமா இனி எதையும் ஈஸியா Build பண்ணலாம். நீங்களும் உங்களோட அடுத்த Project-க்கு இந்த Vibe Coding-ஐ try பண்ணி பாருங்க!
