Helakuru இப்போது Helago உடன் போக்குவரத்து சேவைக்குள் கால் பதிக்கிறது!

Share or Print this:

இலங்கையின் மிகவும் பிரபலமான சூப்பர் செயலியான Helakuru, ‘Helago’ என்ற புதிய போக்குவரத்துச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அவர்களின் சூப்பர் செயலி பயணத்தின் அடுத்த மைல்கல்லாகும்.

Helakuru செயலியின் நிறுவனர் தனிக்க பெரேரா (Dhanika Perera), தனது முகநூல் பதிவில் இந்த புதிய சேவை குறித்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். ஒரு சாதாரண சிங்கள விசைப்பலகையாக (keyboard) ஆரம்பித்து, இன்று 4.4 மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய டிஜிட்டல் தளமாக Helakuru வளர்ந்துள்ளது.

இந்த மாபெரும் பயனர் தளத்தைக் கொண்டு, மக்களுக்குத் தேவையான சேவைகளையும், அந்தச் சேவைகளை வழங்கக்கூடியவர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தளமாக Helakuru செயல்பட முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதன் முதல் படியாக, போக்குவரத்துத் தேவைகளைக் கொண்டவர்களையும், போக்குவரத்துச் சேவைகளை வழங்கக்கூடிய ஓட்டுநர்களையும் இணைக்க Helago சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Helago-வின் முக்கிய நோக்கம் என்ன?

தற்போதுள்ள ரைட்-ஹெய்லிங் (ride-hailing) சேவைகளில் உள்ளதைப் போல, கண நேரத்திற்கு மாறும் மர்மமான கட்டண முறையை மாற்றியமைத்து, அனைவருக்கும் நியாயமான மற்றும் வெளிப்படையான கட்டணத்தை வழங்குவதே Helago-வின் முக்கிய குறிக்கோள்.

இந்த புதிய சேவை, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இரு தரப்பினருக்கும் சமமான மற்றும் நியாயமான ஒரு பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஓட்டுநர்களுக்கான அறிவிப்பு!

Helakuru Superapp வழியாக ஓட்டுநர்கள் இன்று முதல் Helago சேவையில் பதிவு செய்ய முடியும். பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்தக்கூடிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Helago-வின் உத்தியோகபூர்வ இணைப்புகள்:

Helakuru விம் இந்த புதிய முயற்சியின் மூலம் இலங்கையின் போக்குவரத்துத் துறையில் ஒரு நேர்மையான மற்றும் புதுமையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கிரோம்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *