அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Microsoft இன் Windows மென்பொருளின் Blue Screen Error காரனமாக உலகம் பல சேவைகள் பாதிக்கப்பட்டமை நாம் அறிந்ததே.
Microsoft மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த CrowdStrike என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் Microsoft Serverகள் முடங்கின. இந்த Server முடக்கத்தால் உலகம் முழுவதும் கணினி மற்றும் மடி கணினிகளின் முகப்பு திரை நீல நிறமாக மாறி பல்வேறு சேவைகள் முடங்கியது.
பாதிப்புகள் ஓரளவு சரிசெய்யப்பட்ட நிலையில்பங்குச் சந்தையில் Microsoft மற்றும் CrowdStrike பங்குகள் வீழ்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. Microsoft இன் பங்குகள் 0.74 சதவீதம் சரிந்துள்ள்ள நிலையில் CrowdStrike பங்குகள் 11.10 சதவீதம் வரையில் சரிந்துள்ளன. இந்த பாதிப்புகளால் CrowdStrike நிறுவனம் 9 பில்லியன் டொலர்கள் [சுமார் 273,054 ரூபாய் கோடி] சந்தை மூலதனத்தை இழந்துள்ளது.
