குரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு

Share or Print this:

குரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி.எம்.எல். 5க்கான ஸ்பீச் இன்புட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் பேசுவது உள்வாங்கப் பட்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றலாம். இதற்கான இணைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் தேவையானக் கட்டமைப்பை, இந்த பிரவுசரில் கூகுள் தந்துள்ளது. இதற்கான சிறிய டெமோ புரோகிராம் ஒன்றும் காட்டப்படுகிறது. இந்த டெமோ புரோகிராம், இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் கிடைக்கும். முப்பரிமாணக் காட்சிகள் காட்டு வதற்கான தொழில் நுட்பமும் இந்த பிரவுசரில் இணைக்கப் பட்டுள்ளது.
இந்த சோதனைத் தொகுப்பினை http://www.google.com/intl/en/landing/chrome/beta/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 நன்றி : கம்ப்யூட்டர் மலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *