நாங்க எல்லோரும் அடிக்கடி முகம் கொடுக்கிற ஒரு பொதுவான பிரச்சனை தான், எங்களது Google Account-க்குரிய Password-ஐ மறந்து போறது. இப்படி நடந்தா வழமையாக Recovery Email அல்லது Phone number-க்கு OTP அனுப்பி தான் நாங்க Account-ஐ recover பண்ணுவோம். சில நேரங்களில் போன் கைவசம் இல்லை என்றாலோ அல்லது நெட்வொர்க் பிரச்சனை என்றாலோ அதுவும் சாத்தியமில்லாம போயிடும். இதுக்கு ஒரு நிரந்தர தீர்வா, Google இப்போ ஒரு அட்டகாசமான புதிய Update ஒன்றை கொண்டுவந்திருக்காங்க.
ஆமாம், ஜூலை 2026-ல் Google அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதியின் மூலமா, இனி நீங்க உங்களுடைய “Selfie Video” ஒன்றைப் பயன்படுத்தி மிக இலகுவாக உங்களது Google Account-க்குள் Sign in செய்ய முடியும்.
இந்த புதிய Tech Update பற்றித் தான் இந்த பதிவுல நாங்க விளக்கமா பாக்கப் போறோம்.
Selfie Video Sign-in என்றால் என்ன?
இதுவரைக்கும் நாங்க Passwords, Two-Factor Authentication (2FA), Passkeys போன்ற முறைகளை பயன்படுத்தி தான் Google Account-களுக்குள் நுழைந்தோம். ஆனா இப்போ, உங்களுடைய முகத்தை ஒரு short video-வாக பதிவு செய்து, அதை உங்க Account-க்கான திறவுகோலாக (Key) பயன்படுத்த முடியும். நீங்க Password மறந்துட்டாலோ அல்லது உங்களது போன் தொலைந்து விட்டாலோ, இந்த Selfie video option உங்களை Account-க்குள் மீள நுழையப் பெரிதும் உதவி செய்யும்.
இது எப்படி வேலை செய்யுது?
இந்த வசதியை நீங்க பயன்படுத்த, முதல்ல உங்க Account Settings-க்குள்ள போய் ஒரு ‘Reference Video’-வை பதிவு செய்யணும்.
Setup செய்யும் போது உங்களது Phone Camera On ஆகி, உங்களைச் சில திசைகளில் தலையைத் திருப்பச் சொல்லும் (உதாரணமாக: இடது, வலது பக்கமாகத் தலையைத் திருப்புவது). இதன் மூலம் உங்க முகத்தின் பல கோணங்களை Google துல்லியமா Capture செய்து, அதைத் தங்களுடைய Server-களில் Secure ஆக Store பண்ணி வைக்கும்.
பிற்பாடு எப்போதாவது நீங்க Account-க்குள் Sign in பண்ண முடியாம கஷ்டப்படும் போது, Google மீண்டும் உங்களை ஒரு Live Selfie Video எடுக்கச் சொல்லும். அந்தப் புதிய வீடியோவை, நீங்க ஏற்கனவே பதிவு செஞ்ச Reference video-வோட ஒப்பிட்டுப் பார்த்து, “இது நீங்க தானா?” என்பதை Google உறுதிப்படுத்தும்.
Deepfake அல்லது Photo-வைக் காட்டி ஏமாற்ற முடியுமா?
நிச்சயமாக முடியாது! இதுல Google ரொம்பவே கவனமா இருக்காங்க. யாராவது உங்க போட்டோவையோ அல்லது Deepfake வீடியோக்களையோ காட்டி Sign in பண்ண முயற்சி செஞ்சா அது வேலை செய்யாது. ஏன்னா, இதுல “Liveness checks” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கு.
அதாவது, நீங்க Sign in செய்யும் அந்த நேரத்துல உங்களைச் சில அசைவுகளைச் செய்யச் சொல்லி (உதாரணமாக: கண்களைச் சிமிட்டுவது, தலையை அசைப்பது) Google கேட்கும். இதன் மூலம் கேமராவுக்கு முன்னாடி இருப்பது ஒரு உண்மையான மனிதன் தானா என்பதை System இலகுவாகக் கண்டுபிடிச்சுடும்.
பாதுகாப்பு (Security & Privacy) எப்படி?
உங்க மனசுல இப்போ ஒரு கேள்வி வரலாம், “என்னுடைய முகத்தை வீடியோவா Google-ட்ட குடுக்குறது பாதுகாப்பானதா?” என்று. Google இதற்கும் தெளிவான விளக்கம் கொடுத்திருக்காங்க:
- Encrypted Data: நீங்க பதிவு செய்யும் அந்த Reference selfie video முற்றுமுழுதாக Encrypt செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பான முறையில தான் சேமிக்கப்படும்.
- முழு கட்டுப்பாடு: இந்த வீடியோ உங்களுடைய முழு கட்டுப்பாட்டில் தான் இருக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லைனா, எந்த நேரத்துலயும் உங்க Account settings-க்கு போய் இதை Delete பண்ணிக்கொள்ளலாம்.
- வேறெதற்கும் பயன்படுத்தப்படாது: உங்களுடைய அனுமதியில்லாமல் இந்த வீடியோவை வேறு எந்த நோக்கத்திற்காகவும் (உதாரணமாக விளம்பரங்களுக்கோ அல்லது வேறு AI பயிற்சிக்கோ) Google பயன்படுத்த மாட்டார்கள் என உறுதி அளித்துள்ளார்கள்.
இந்த வசதியை எப்படி Setup செய்வது?
இந்த புதிய Feature-ஐ நீங்களும் Try பண்ணிப் பார்க்க நினைச்சா, கீழ இருக்குற படிகளை Follow பண்ணுங்க:
- உங்களது பிரவுசரில்
myaccount.google.comதளத்திற்குச் செல்லுங்கள். - அங்குள்ள Menu-வில் Security (அல்லது Security & sign-in) என்ற பகுதிக்குச் செல்லவும்.
- அதனுள் “How you sign in to Google” என்ற Option-க்கு கீழே புதிதாக Selfie video என்ற ஒரு வசதி இருக்கும். அதைக் கிளிக் செய்யவும்.
- “Add selfie for sign-in” என்பதைத் தெரிவு செய்து, திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய உங்களது முகத்தைக் கேமராவில் காண்பித்து, தலையை அசைத்து வீடியோவைப் பதிவு செய்யவும்.
அவ்வளவு தான்! இனி என்றாவது ஒரு நாள் Password மறந்து போனா, எந்தக் கவலையும் இல்லாம உங்களது முகத்தைக் காட்டியே Account-ஐ மீட்டெடுக்கலாம்.
Google-ன் இந்த புதிய அப்டேட் நிஜமாகவே ஒரு வரவேற்கத்தக்க விடயம் தான். Passwords-ஐ ஞாபகம் வைக்கும் சிரமத்தை இது முழுமையாகக் குறைக்கிறது. அதுமட்டுமில்லாம Account Recovery செயல்முறையையும் இது ரொம்பவே சுலபமாக்கியுள்ளது.
இந்த Selfie Video Sign-in வசதியைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்பதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களையும் கீழே பகிர்ந்துகொள்ளுங்கள்.
மீண்டும் ஒரு பயனுள்ள Tech பதிவுடன் சந்திக்கிறேன்!
