நாங்கள் வழக்கமாக Google இலே ஏதாவது ஒரு விசயத்தைத் தேடும் போது, ஒரு Keyword ஐ அடித்துவிட்டு பல Websites களைத் திறந்து பார்க்க வேண்டியிருக்கும். ஆனால், இப்பொழுது கூகுள் நிறுவனம் தனது Chrome Browser இன் தேடல் முறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் AI Mode Search என்ற சூப்பரான அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்த AI Mode இன் விசேசம் என்னவென்றால், இது சாதாரணமாக ஒரு வரியில் பதிலைச் சொல்லிவிட்டுப் போகாமல், நீங்கள் கேட்கும் பெரிய கேள்விகளைப் பகுப்பாய்வு செய்து, உடனுக்குடன் துல்லியமான பதில்களைத் தருகின்றது.
இந்த AI Mode எப்படி வேலை செய்கிறது?
நாங்கள் ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்கும் போது, இந்த AI Mode ஆனது Query Fan-Out என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. அதாவது, உங்கள் கேள்வியை வெவ்வேறு துணைத் தலைப்புகளாக (Subtopics) பிரித்து, ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களில் தேடி, எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முழுமையான பதிலாகத் தருகின்றது.
உதாரணமாக, நீங்கள் ஒரு புதிய Tech Product ஐப் பற்றி ஆராய்கிறீர்கள் என்றால், அதன் சாதக பாதகங்கள் மற்றும் விலை விபரங்கள் என அனைத்தையும் ஒரே தேடலில், ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
இதில் உள்ள முக்கியமான Features:
- Gemini 3 Pro மாடலின் பலம்: இந்த AI Mode இன் பின்னால் கூகுளின் சக்திவாய்ந்த Gemini 3 Pro மாடல் இயங்குவதால், கடினமான கேள்விகளுக்கும் ஆழமான விபரங்களை வழங்க முடிகின்றது.
- Side Panel வசதி: நீங்கள் ஒரு வெப்சைட்டைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, பக்கத்தில் உள்ள Side Panel மூலம் அந்தப் பக்கத்தில் உள்ள விபரங்களைப் பற்றி AI உடன் உரையாட முடியும் (Chat about your tabs).
- Multimodal தேடல்: வெறும் Text மாத்திரமன்றி, உங்களது குரல் (Voice) மூலமும் அல்லது ஒரு புகைப்படத்தை (Lens) அப்லோட் செய்தும் உங்களால் கேள்விகளைக் கேட்க முடியும்.
- AI Mode History: நீங்கள் ஏற்கனவே தேடிய விபரங்களை அப்படியே சேமித்து வைத்திருக்கும். எனவே, எப்போது வேண்டுமானாலும் பழைய தேடல்களைத் தொடர்ந்து செய்ய முடியும்.
இதனை எவ்வாறு பயன்படுத்துவது?
Chrome Browser ஐப் பயன்படுத்துபவர்கள் மிகவும் இலகுவாக இந்த வசதியை அணுகலாம்:
- உங்கள் கணினியில் Chrome இன் New Tab பக்கத்தைத் திறக்கவும்.
- தேடல் பட்டிக்கு (Search Box) வலது பக்கத்தில் உள்ள AI Mode ஐ கிளிக் செய்யவும். அல்லது கீபோர்டில் Tab + Enter ஐ அழுத்தலாம்.
- இப்போது உங்களது கேள்விகளை விரிவாகக் டைப் செய்து தேடலை ஆரம்பிக்கலாம்.
தற்போது இந்த வசதியானது முதற்கட்டமாக குறிப்பிட்ட சில பயனர்களுக்கும், ஆங்கில மொழியிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் ஏனைய மொழிகளிலும், பிராந்தியங்களிலும் முழுமையாகக் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உங்களது பிரவுசிங் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த AI Mode நிச்சயம் ஒரு சிறந்ததொரு கருவியாகும்.
