Open Ai நிறுவனத்தின் Chat GPT மக்கள் மத்தியில் மிக பிரபல்யமாக இருந்த்தாலும் சில வேளை அதனைப் பயனபடுத்துவதற்க கட்டாயமாக Login செய்ய வேண்டியா தேவை இருந்தது. இது ஒன்றும் புதிய விடயம் அல்லாவிட்டாலும் சிலர் தமது மின்னஞ்சலைப் பயன்படுத்தி கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு தயங்கிவந்தனர். ஏனெனில் தமது தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதாக பலரும் சந்தேகித்தனர்.
இதற்காகன தீர்வாகவும், புதிய பயனர்களை கவர்ந்தெடுக்கும் நோக்கிலும் Open Ai நிறுவனம் Chat GPT ஐ எவ்வித பயனர் கணக்கும் இன்றி நேரடியாக பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செதுள்ளது. தற்போது சில நாடுகளில் மாத்திரம் இந்த வசதி பரீட்சாத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் உலகளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என அறியக் கிடைக்கிறது.
