எமது கைபேசியில் உள்ள Network provider-இன் Service சரி இல்லை என்றாலோ அல்லது சிக்னல் பிரச்சினை என்றாலோ, நாம் உடனடியாக வேறு ஒரு Network-இற்கு மாற நினைப்போம். ஆனால், அப்படி மாறினால் எமது பழைய நம்பரை இழக்க வேண்டி வரும். ஆபீஸ் தொடக்கம் பேங்க் வரைக்கும் ஒரே நம்பரை கொடுத்திருப்பதால், பலரும் Network-ஐ மாற்ற தயங்குவார்கள். ஆனால், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Mobile Number Portability (MNP) வசதி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Mobile Number Portability (MNP) என்றால் என்ன? Mobile Number Portability என்பது நாம் தற்போது பயன்படுத்தும் மொபைல் இலக்கத்தை (Mobile Number) எந்தவித மாற்றமும் செய்யாமலேயே வேறு ஒரு Network provider-இற்கு (உதாரணமாக ஒரு Network-இல் இருந்து வேறு ஒரு Network-இற்கு) மாறக்கூடிய வசதியாகும்.
நீண்ட கால தாமதத்திற்குப் பின் ஒரு தீர்வு: உண்மையில் இந்த MNP திட்டம் இலங்கையில் புதிதாக பேசப்படும் ஒன்றல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே TRCSL (Telecommunication Regulatory Commission of Sri Lanka) இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இணைந்து ‘Lanka Portability’ என்ற ஒரு நிறுவனத்தையும் உருவாக்கியிருந்தன. அதனைத் தொடர்ந்து 2021-இல் TRCSL அனுமதியும் வழங்கப்பட்டு, 2023-இல் இதற்கான சட்ட ரீதியான அனுமதிகள் (Legal clearance) எல்லாம் வழங்கப்பட்டிருந்தாலும், சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாக தாமதங்களால் இது நடைமுறைக்கு வரவில்லை.
செப்டம்பரில் கட்டாயம் நடைமுறைக்கு வரும்: தற்போது Digital Economy பிரதியமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne) பாராளுமன்றத்தில் இது தொடர்பில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த MNP திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசாங்கமே Sri Lanka Telecommunication Act-இன் ஊடாக ஒரு பொறிமுறையை (Mechanism) உருவாக்கி இதனை கட்டாயமாக அமுல்படுத்தும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், Fixed Line-களுக்கான Portability-க்கு முன்பாக, மொபைல் பாவனையாளர்களின் நலன் கருதி Mobile Number Portability-யை முதலாவதாக அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தேவையற்ற தாமதங்கள் தவிர்க்கப்படும்.
இதன் மூலம் இலங்கையில் உள்ள மில்லியன் கணக்கான மொபைல் பாவனையாளர்கள் எந்தவொரு இடையூறும் இன்றி, தங்களுக்கு சிறந்த Service வழங்கும் Network-ஐ இலகுவாகத் தேர்ந்துகொள்ள முடியும். இது Telecommunication துறையில் ஒரு சிறந்த போட்டியையும், பாவனையாளர்களுக்கு தரமான சேவையையும் பெற்றுக்கொடுக்க உதவும் என எதிர்பார்க்கலாம்.
இது ஒரு சிறந்த Update ஆக அமையும் என நினைக்கின்றேன். இந்த வசதி நடைமுறைக்கு வந்ததும் நீங்கள் எந்த Network-இற்கு மாற யோசித்துள்ளீர்கள் என்பதை கீழே Comment-இல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
