நம்மில் பல பேருக்கு Robots என்றாலே இரும்பாலும், பிளாஸ்டிக்காலும் (Plastic) உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரம் தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், மனிதர்களைப் போலவே தத்ரூபமாக சிரிக்கக்கூடிய, முக பாவனைகளை வெளிப்படுத்தக்கூடிய Robot-களை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த கற்பனையை நிஜமாக்கியிருக்கிறார்கள் ஜப்பானின் University of Tokyo ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் Robot-களின் முகத்தில் ஒட்டக்கூடிய, நிஜமான மனித செல்களைக் கொண்ட “Living Skin” (உயிருள்ள தோல்) ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்கள்.
இது எப்படி சாத்தியமானது?
பொதுவாக Humanoid Robot-களுக்கு மனிதனைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்க Silicone ரப்பரைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த ரப்பரால் மனிதத் தோலைப்போல வியர்க்கவோ, அல்லது சிறு கீறல்கள் விழுந்தால் தானாகவே குணமடையவோ (Self-healing) முடியாது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலேயே பேராசிரியர் Shoji Takeuchi தலைமையிலான குழுவினர், மனித செல்களில் இருந்து வளர்க்கப்பட்ட Engineered skin tissue-ஐ பயன்படுத்தி இந்தத் தோலை உருவாக்கியுள்ளனர்.
இதிலிருக்கும் மிகப்பெரிய சவால், அந்த உயிருள்ள தோலை எப்படி உரிக்காமல், கிழியாமல் Robot-ன் உலோகம் அல்லது பிளாஸ்டிக் முகத்தில் ஒட்டுவது என்பதுதான். இதற்காக அவர்கள் மனித தோலில் உள்ள Ligaments (தசைநார்கள்) அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு அருமையான தேடலை நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது, Robot முகத்தின் மேற்பரப்பில் V-shaped perforations (சிறிய V வடிவ துவாரங்கள்) அமைத்து, ஒரு விசேஷமான Collagen gel மூலம் தோலை அதோடு பிணைத்துள்ளனர். இதனால், Robot சிரிக்கும் போதும், அதன் முகம் அசையும் போதும், அந்தத் தோல் எங்கும் பிய்த்துக்கொண்டு போகாமல் (without tearing or peeling) மிக இயல்பாக மனிதர்களைப் போலவே அதனுடன் சேர்ந்து வளைந்து கொடுக்கிறது.
இதன் பயன்கள் என்ன?
இந்த “Living Skin” தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான அம்சம் இதன் Self-healing ஆற்றல் தான். எமது உடம்பில் சின்னதாக ஒரு காயம் ஏற்பட்டால் எப்படி அதுவாகவே ஆறிவிடுகிறதோ, அதேபோல இந்த Robot-களின் தோலில் ஏற்படும் சிறிய வெட்டுக்களும் சேதங்களும் தானாகவே குணமடைந்துவிடும்.
எதிர்காலத்தில், இந்த அசத்தலான தொழில்நுட்பமானது மனிதர்களைப் போல இயங்கும் Humanoid Robots உருவாக்கத்தில் மாத்திரமல்லாமல், Cosmetics (அழகுசாதனப் பொருட்கள்) துறையில் மனிதர்களுக்குப் பாதிப்பின்றிப் புதிய பொருட்களைப் பரிசோதிக்கவும், மற்றும் Plastic Surgery மருத்துவர்களுக்கான பயிற்சிகளுக்கும் பெரியளவில் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான வித்தியாசங்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவது மட்டும் உறுதி!
