செயற்கை நுண்ணறிவு (Ai) மூலமாக சமூக ஊடகங்களில் படங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கவும் பகிரவும் மக்களுக்கு பலகிவிட்டனர். ஆனால் சில நேரங்களில், இது சில ஆபத்தான தவறான விளைவுகளை ஏற்படுத்தி வருவதும் எமக்குத் தெரிந்ததே.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் Ai மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இனங்கண்டு அவற்றை Ai இனால் உறுவாக்கப்பட்டது என குறிப்பிடும் அல்லது லேபல் இடும் ஒரு முறைமையை உருவாக்க மெட்டா என்ற நிறுவனம் தயாராகி வருகிறது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் என அறியக் கிடைக்கிறது.
டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டதாகவும், போப் ஆண்டவர் வெள்ளை ஜாக்கெட் அணிந்ததாகவும் தயாரிக்கப்பட்ட Ai படங்கள் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டதை நாமறிவோம். அதேபோல நமது நாட்டுத் அரசியல் வாதிகளையும் இவ்வாறு Ai படங்கள் மூலம் கலாய்த்தையும் பார்த்திருப்பீர்கள், இந்த படங்கள் உண்மையானவை அல்ல, அவை Ai இனால் உருவாக்கப்பட்டவை என்பதை பலரும் ஆரிந்திருக்க மாட்டார்கள், மேலும் இது போன்ற படங்களை டீப்ஃபேக் என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய நிலையிலேயே மெட்டா நிறுவனம், சமூக வலைதளங்களில் உள்ளவர்கள், ஒரு படம் Ai இனால் உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையான நபரால் எடுக்கப்பட்டதா என்பதைச் அரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த முறைமையை மேட்ட விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.
