யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் அபராதம்?

Share or Print this:
சிறார்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக, யூடியூப் நிறுவனத்திற்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள், 13 வயதுக்குட்பட்ட சிறார்களின் Data-க்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்திக் கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளன.
அத்துடன், அந்த Data-க்கள் மூலம் சிறார்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து, அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது. அப்போது விதிகளை மீறியதற்காக 150 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் செலுத்த யூடியூப் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், இதற்கு அந்நாட்டு நீதித்துறை ஒப்புதல் வழங்க வேண்டும். அவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில், சிறார்களின் அந்தரங்கம் பேணும் உரிமை தொடர்பாக விதிக்கப்படும் அதிகபட்ச அபராத தொகையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனினும், யூடியூப் உரிமையாளரான கூகுள் நிறுவனத்தின் வருமானத்தை ஒப்பிடும்போது, இந்த தொகை மிகவும் குறைவு தான் என்று மறுபுறம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *